Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு முடிவை தள்ளிப் போட சுயநலம் தான் காரணம்? கிறிஸ் கெயில் பற்றி கசிந்த ஷாக் தகவல்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் இந்திய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.

இரண்டு முறை ஓய்வு முடிவை மாற்றினார் கிறிஸ் கெயில். அது ஏன் என்பது குறித்து தற்போது கிசுகிசுக்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெயில் இல்லாதது பெரும் இழப்பு தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கிறிஸ் கெயில் உண்மையில் அணிக்காக ஆடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் மாற்றம்

முதல் மாற்றம்

கிறிஸ் கெயில் நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த சில மாதங்கள் முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அது தான் தன் கடைசி ஒருநாள் தொடர் என்றார். அந்த தொடரில் சதம் அடித்து, சிக்ஸர்கள் குவித்து அதிரடி காட்டினார். நல்ல பார்மில் இருந்தார். அதனால், உலகக்கோப்பை வரை ஆட உள்ளேன் என கூறினார்.

உலகக்கோப்பையுடன் ஓய்வு

உலகக்கோப்பையுடன் ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக உலகக்கோப்பை தொடரில் ஆடிய கெயில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. ஏற்கனவே கூறியது போல உலகக்கோப்பையோடு ஓய்வு பெறப் போகிறார் என எண்ணிய நிலையில், தன் முடிவை மாற்றினார். இந்திய அணிக்கு எதிரான தொடர் வரை தான் ஆடுவேன் என்றார்.

இந்தியா தொடர்

இந்தியா தொடர்

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காத அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். முதல் ஒருநாள் போட்டியில் 4 ரன்களும், இரண்டாம் போட்டியில் 11 ரன்களும் எடுத்தார். மிகவும் நிதானமாக பேட்டிங் செய்து வெறுப்பேற்றினார்.

குவிந்த சாதனைகள்

குவிந்த சாதனைகள்

எனினும், முதல் போட்டியில் ஆடியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகள் ஆடி இருந்த பிரையன் லாரா சாதனையை முந்தினார். அடுத்த போட்டியில் எடுத்த 11 ரன்களில், லாராவை முந்தி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெயரைப் பெற்றார்.

லாராவை முந்த வேண்டும்?

லாராவை முந்த வேண்டும்?

இது முற்றிலும் உண்மையா? என்பது தெரியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவை முந்திய வீரர் என்ற பெயரை எடுக்கத் தான் கிறிஸ் கெயில் ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டே வந்தாரா?

மோசமான நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

மோசமான நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி படு மோசமான நிலையில் இருக்கிறது. அதிரடி வீரர்கள் இருந்தாலும், அந்த அணியால் ஒரு சமபலம் கொண்ட அணியை கண்டு பிடிக்க முடியவில்லை. சில போட்டிகளில் வெற்றிக்கு அருகே வந்தாலும் மோசமான ஷாட் ஆடி தோல்வி அடைகிறது. இப்படி தன் தனி மோசமான நிலையில் இருக்கும் போது தன் சாதனைக்காக அணியை பயன்படுத்திக் கொண்டாரா கெயில்?

Story first published: Monday, August 12, 2019, 17:50 [IST]
Other articles published on Aug 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+