Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிராக ஆடப் போகும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இது தான்.. கிறிஸ் கெயில் இருக்காரா?

Recommended Video

IND vs WI 2019 | இந்தியாவுக்கு எதிராக ஆடப் போகும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இது தான்..

ஆன்டிகுவா : இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்படுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி சமீபத்தில் இந்த தொடருக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்தது.

IND vs WI 2019 : Chris Gayle named in WI ODI squad while Darren Bravo dropped

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள 2020 டி20 உலகக்கோப்பை மற்றும் அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இளமையும், அனுபவமும் கலந்த அணியை தேர்வு செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

உலகக்கோப்பை தாக்கம்

2019 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அதிரடியாக வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ், அதன் பின் பெரிய அணிகளுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இறுதியாக கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியிடம் மட்டுமே வெற்றி பெற்றது.

வெளியேற்றப்பட்ட நான்கு வீரர்கள்

உலகக்கோப்பை தொடரில் பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது. அதை மனதில் வைத்து நான்கு வீரர்களை இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கி உள்ளனர். அந்த நான்கு வீரர்கள் - சுனில் ஆம்ப்ரிஸ், டேரன் பிராவோ, ஷானான் கேப்ரியல் மற்றும் ஆஷ்லே நர்ஸ்.

உள்ளே வந்த மூன்று வீரர்கள்

உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற ரோஸ்டன் சேஸ், கீமோ பால், ஜான் கேம்பல் உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பி உள்ளனர்.

கிறிஸ் கெயில் இருக்கிறாரா?

உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளேன் என முன்பு கூறிய மூத்த வீரர் கிறிஸ் கெயில், திடீரென இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளேன் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரையும் அணியில் தேர்வு செய்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜான் கேம்பல், ஈவின் லீவிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், பாபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வைட், கீமோ பால், கிறிஸ் கெயில், ஷெல்டன் காட்ரேல், ஓஷேன் தாமஸ், ஷாய் ஹோப், கீமர் ரோச்.

Story first published: Friday, July 26, 2019, 21:48 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+