Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மேட்ச் கூட கொடுக்க மாட்டோம்.. கிறிஸ் கெயிலுக்கு அதிரடியாக இடம் மறுத்த வெ.இண்டீஸ்.. ஏன் இப்படி?

ஜமைக்கா : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் டெஸ்ட் அணியில் ஆட விருப்பம் தெரிவித்தும் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கிறிஸ் கெயில் இந்திய தொடருடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

உலகக்கோப்பையுடன் ஓய்வு

உலகக்கோப்பையுடன் ஓய்வு

கிறிஸ் கெயில் 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக கூறி இருந்தார். எனினும், பின்னர் இந்திய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுவேன் என மாற்றிக் கூறினார்.

இந்தியா தொடர்

இந்தியா தொடர்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட தான் ஆடுவேன் என அப்போது கூறி ஆச்சரியம் அளித்தார் கிறிஸ் கெயில். அதன் மூலம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி ஓய்வு பெற இருந்தார் கெயில்.

ஏன் மறுப்பு?

ஏன் மறுப்பு?

அதற்கு முக்கிய காரணம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான் என கூறப்படுகிறது. ஐசிசி அறிமுகம் செய்துள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் இரண்டு ஆண்டு காலத்திற்கு நடைபெற உள்ளது. அதன்படி, இனி நடக்கும் அனைத்து டெஸ்ட் தொடர்களும், சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி.

புள்ளிகள் முக்கியம்

புள்ளிகள் முக்கியம்

எனவே, அந்தப் போட்டிகளில் தோல்வி அடைந்தால் அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகளை பாதிக்கும். அதனால், நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் ஆடாத கிறிஸ் கெயிலுக்கு "கடைசி போட்டி சென்டிமென்ட்" கருதி கூட அணியில் இடம் தரவில்லை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம்.

Story first published: Saturday, August 10, 2019, 23:01 [IST]
Other articles published on Aug 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+