Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

301 தான் கடைசி.. ஜெர்ஸி நம்பரில் மெசேஜ் சொன்ன கிறிஸ் கெயில்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தன் ஜெர்ஸி எண்ணை மாற்றினார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மூத்த வீரர் கிறிஸ் கெயில் தன் வழக்கமான ஜெர்ஸி எண் "333"-ஐ விடுத்து "301" என்ற எண் கொண்ட ஜெர்ஸி அணிந்து ஆட வந்தார். அது தான் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இது தான் கிறிஸ் கெயிலின் கடைசி போட்டி என உணர்ச்சிவசப்பட்டு வருகிறார்கள்.

உலகக்கோப்பை ஓய்வு அறிவிப்பு

உலகக்கோப்பை ஓய்வு அறிவிப்பு

2019 உலகக்கோப்பை தொடருடன் கிறிஸ் கெயில் ஓய்வு பெறுவதாக இருந்தது. எனினும், அந்த தொடரின் இறுதியில் தான் இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆட உள்ளதாகக் கூறினார் கெயில். அதன் பின்பும் கூட அவர் போட்டிகளில் ஆடலாம் என கூறப்பட்டது.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் ஆடவில்லை. ஒருநாள் தொடரில் மட்டுமே பங்கேற்றார். அப்போதும் இது தான் கிறிஸ் கெயிலின் கடைசி தொடர் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

சாதனைகள் செய்தார்

சாதனைகள் செய்தார்

இந்த தொடரில் பிரையன் லாராவின் இரண்டு முக்கிய சாதனைகளை முறியடித்தார் கெயில். ஒன்று பிரையன் லாரா 299 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதை முறியடித்து 301 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார் கெயில்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

மேலும், பிரையன் லாரா ஒருநாள் போட்டிகளில் 10,405 ரன்கள் குவித்து இருந்தார். அதையும் முறியடித்தார் கெயில். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகள் ஆடிய வீரர், அதிக ரன்கள் குவித்த வீரர் என இரண்டு மிக முக்கிய சாதனைகளை செய்தார்.

ஜெர்ஸி எண் மாற்றம்

ஜெர்ஸி எண் மாற்றம்

இந்த நிலையில், மூன்றாவது மற்றும் தன் 301வது ஒருநாள் போட்டியில் ஆட வந்த கிறிஸ் கெயில் தன் ஜெர்ஸி எண்ணை 333இல் இருந்து 301ஆக மாற்றினார். கெயில் எப்போதும் தன் மைல்கல் சாதனையை ஜெர்ஸி எண்ணாக அணிபவர் என்பதால், 301வது ஒருநாள் போட்டியைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது உறுதியானது.

உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்

உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்

இதைக் கண்ட கிறிஸ் கெயில் ரசிகர்கள் இது தான் அவரது கடைசி போட்டி, இனி கெயிலின் தனித்துவமான அதிரடி ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட்டில் இனி எப்போதும் பார்க்க முடியாது என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கெயில் இந்தப் போட்டியில் 41 பந்தில் 72 ரன்கள் குவித்து கடைசி பேட்டிங்கை சிறப்பானதாக மாற்றினார்.

Story first published: Wednesday, August 14, 2019, 21:26 [IST]
Other articles published on Aug 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+