For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்புறம் அசிங்கப்பட முடியாது.. தோனி ஜெர்சிக்கு ஓய்வு கொடுத்துறலாம்.. பிசிசிஐ அதிரடி முடிவு!

மும்பை : தோனியின் ஜெர்சி எண் 7க்கு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

டெஸ்ட் போட்டிகளுக்கு இனி ஜெர்சி நம்பர் அணிந்து வீரர்கள் விளையாடலாம் என்ற புதிய நடைமுறையை ஐசிசி கொண்டு வந்துள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டிகளில் ஜெர்சி எண் அணியும் நடைமுறை வர உள்ளது.

இந்த நிலையில் தான் தோனி ஜெர்சி குறித்து முன்பே சிந்தித்து நடவடிக்கை எடுக்க உள்ளது பிசிசிஐ. இதனால், மற்ற வீரர்கள் தோனியின் ஜெர்சி எண் 7ஐ பயன்படுத்த முடியாது. ஆனால், பிசிசிஐ ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது தான் சுவாரசியம்.

மக்கள் பணத்தை தோனிகிட்ட கொடுத்துட்டாங்க.. ஆடிட்டர் அதிரடி.. அமரபள்ளி வழக்கில் திடுக் திருப்பம்! மக்கள் பணத்தை தோனிகிட்ட கொடுத்துட்டாங்க.. ஆடிட்டர் அதிரடி.. அமரபள்ளி வழக்கில் திடுக் திருப்பம்!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வருடக்கணக்கில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் முதல் துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த மாதம் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.

புதிய ஜெர்சி

புதிய ஜெர்சி

அப்போது இந்திய வீரர்கள் டெஸ்ட் ஜெர்சியில் தங்களுக்கு விருப்பப்பட்ட எண்ணை அணிந்து விளையாடலாம். பல வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தும் அதே எண்ணை தான் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி 18ஆம் எண்ணையும், ரோஹித் சர்மா 45ஆம் எண்ணையும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அதே எண் கொண்ட ஜெர்சியை அவர்கள் டெஸ்ட் போட்டியிலும் அணிவார்கள் என கருதப்படுகிறது.

மூத்த வீரர்கள் ஜெர்சி

மூத்த வீரர்கள் ஜெர்சி

சில சமயம் இளம் வீரர்கள் மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் போன்றவர்களின் ஜெர்சி எண்ணை அணிந்து விளையாடுவார்கள். தங்கள் ஆதர்ச நாயகர்களின் எண் என்பதால் அப்படி செய்வார்கள், சிலர் தங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்ட எண் என்பதால், மூத்த வீரர்களின் எண்களை பயன்படுத்த நேரிடும்.

ஷர்துல் தாக்குர் விவகாரம்

ஷர்துல் தாக்குர் விவகாரம்

அப்படி ஒரு முறை, இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் 10ஆம் எண்ணை அணிந்து விளையாடினார். அப்போது ரசிகர்கள் அவரை பயங்கரமாக கிண்டல் செய்தார்கள். பின்னர், பிசிசிஐ தலையிட்டு அந்த எண்ணை பயன்படுத்த வேண்டாம் என கூறும்படி ஆனது.

தோனி விஷயத்தில் உஷார்

தோனி விஷயத்தில் உஷார்

அப்போது முதல் பிசிசிஐ யாருக்கும் சச்சினின் 10ஆம் எண்ணை அணிந்து ஆட அனுமதிப்பதில்லை. இதை எழுதப்படாத விதியாக கடைபிடித்து வருகிறது. தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், அவரது 7ஆம் எண் ஜெர்சியை டெஸ்ட் போட்டிகளில் அணிந்து ஆட அனுமதி மறுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது பிசிசிஐ. காரணம், சச்சின் ரசிகர்கள் போல,தோனி ரசிகர்களும் அதை கிண்டல் செய்து ஓட, ஓட விரட்டுவார்கள் என்ற பயம் தான் என்கிறார்கள்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 22 அன்று துவங்க உள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி அந்த தொடரில் களம் காண உள்ளது.

Story first published: Thursday, July 25, 2019, 12:02 [IST]
Other articles published on Jul 25, 2019
English summary
IND vs WI 2019 : Dhoni no.7 Jersey will be rested in test matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X