For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழர்களுக்கு எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா? அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்!

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

அதைக் கண்டு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் தயாரானது.

குல்தீப் - அஸ்வின்

குல்தீப் - அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் - அஸ்வின் இருவரில் யாரை அணியில் தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவியது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கலக்கி இருந்தார்.

அஸ்வின் இல்லையா?

அஸ்வின் இல்லையா?

இந்த நிலையில், முதல் டெஸ்டுக்கான அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. குல்தீப் யாதவ்வும் அணியில் இல்லை. ஜடேஜா மட்டுமே அணியில் சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்று இருந்தார்.

ரசிகர்கள் கடும் விமர்சனம்

ரசிகர்கள் கடும் விமர்சனம்

அனுபவ வீரர் அஸ்வின் அணியில் இடம் பெறாததை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள். அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் இது அரசியல் எனவும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். ரசிகர்களின் விமர்சனங்களில் சில பதிவுகள் இங்கே -

தொடர் நாயகன் விருது

அஸ்வின் இல்லையா? கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் தொடர் நாயகன் விருது வென்றார். அப்படி இருந்தும் அவரை நீக்கி இருக்கிறார்கள். முன்பு தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக் அணியில் நீக்கப்பட்டார்கள். அவர்கள் டெஸ்ட் ரெக்கார்டை பாருங்கள். அவர்கள் ஹனுமா விஹாரி, ரோஹித்தை விட சிறப்பானவர்கள் என தமிழ்நாடு வீரர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றி கூறி இருக்கிறார்.

விஹாரி அஸ்வின் ஆக முடியாது

மோசமான தேர்வு விஹாரி பந்துவீச்சில் அஸ்வின் ஆக முடியாது என குறிப்பிட்டு, ஹனுமா விஹாரி பகுதி நேர பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்றதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

பெஞ்சு வீரர்கள்

பெஞ்சில் இருக்கும் வீரர்கள் பலம் ஆடும் வீரர்களை விட அதிகமாக உள்ளது. அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார் என குறிப்பிட்டு இருக்கிறார்.

முட்டாள்தனமான முடிவு

கோலி மற்றும் அணி நிர்வாகம் எடுத்த முட்டாள்தனமான முடிவு. ரோஹித், அஸ்வின் இல்லை. அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்கள். வீரர்கள் இடையே ஏதோ சிக்கல் உள்ளது என கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, August 22, 2019, 22:41 [IST]
Other articles published on Aug 22, 2019
English summary
IND vs WI 2019 : Fans reacted as Ashwin dropped for first test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+