Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தம்பி சரிப்படாது.. ரெண்டுமே சரியில்லை.. உடனே ஆளை மாத்துங்க.. கட்டம் கட்டி விளாசிய ரசிகர்கள்!

Recommended Video

IND VS WI : 2ND ODI | வெஸ்ட் இண்டீசை 210 ரன்களில் சுருட்டி வீசி வென்ற இந்தியா..!!- வீடியோ

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த சொதப்பல்களால் மீண்டும் ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

பேட்டிங் மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பினார் ரிஷப் பண்ட். டி20 தொடரில் ஒரு போட்டியில் அரைசதம் அடித்து இருந்ததால் இனி விமர்சனத்துக்கு உள்ளாக மாட்டார் என கருதப்பட்டது.

ஆனால், இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டமிழந்த விதம் மற்றும் கீப்பிங்கில் கோட்டை விட்ட ரன்களை பார்த்து கடுப்பான இந்திய ரசிகர்கள் அவரை வெளுத்து வருகிறார்கள்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. போட்டிக்கு முன்பே கேப்டன் கோலி ரிஷப் பண்ட் தான் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வார் என அறிவித்தார். அதிரடி வீரர் பண்ட் நான்காம் வரிசையில் பொறுப்பாக ஆட வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்தது.

பண்ட் டாட் பால்

பண்ட் டாட் பால்

தவான், ரோஹித் ஆட்டமிழந்த போது, கோலியுடன் கூட்டணி அமைத்து பேட்டிங் ஆடினார். கோலியின் அறிவுரைகளையும் பெற்றே ஆடினார். நிதானமாக பேட்டிங் ஆட முயன்ற பண்ட் ஒற்றை ரன்கள் ஓடாமல், வெறும் டாட் பால்களாக ஆடி வந்தார்.

மோசமான ஷாட் ஆடினார்

மோசமான ஷாட் ஆடினார்

நீண்ட நேரம் ரன் அடிக்காமல் ஆடியதால், அவசரப்பட்டு மோசமான ஷாட் ஆட ஆசைப்பட்டு பவுல்ட் அவுட் ஆனார் பண்ட். 35 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தன் கடைசி 14 பந்துகளில் 12 டாட் பால்கள் ஆடி இருந்தார்.

கீப்பிங்கில் மோசம்

கீப்பிங்கில் மோசம்

மேலும், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய அவர் சில முறை பந்தை ஃபோர் செல்ல அனுமதித்தார். பண்ட்டை நம்பி டிஆர்எஸ் கேட்ட கேப்டன் கோலி அதை வீணடித்தார். அதனால், போட்டியில் ரிவ்யூ கேட்க முடியாமல் போனது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

எந்த ரசிகர்கள் ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆட வேண்டும் என சில நாட்கள் முன்பு கோரிக்கை வைத்தார்களோ, அதே ரசிகர்கள் தற்போது ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சில இங்கே -

இரண்டுமே சரியில்லை

ரிஷப் பண்ட் மோசமான பேட்ஸ்மேன் மட்டுமல்ல, அவர் விக்கெட் கீப்பிங்கும் மோசம். இரண்டுமே சரியில்லை என கூறி உள்ளார் இந்த ரசிகர்.

என்ன செய்தால் புரியும்?

என்ன செய்தால் ரிஷப் பண்ட் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள் என இந்திய அணிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் ஒரு ரசிகர்.

ஓவர் பில்டப்

ரிஷப் பண்ட்டுக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை நாசூக்காக சொல்கிறார். பண்ட் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

புதிய விக்கெட் கீப்பர் தேவை

உச்சகட்டமாக ஒருவர், இந்தியாவுக்கு உடனடியாக புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவை. பண்ட் கீப்பிங்கில் மோசமாக செயல்பட்டார். பேட்டிங்கிலும் நான்காம் வரிசையில் நம்ப முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Story first published: Monday, August 12, 2019, 9:52 [IST]
Other articles published on Aug 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+