Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நவ்தீப் சைனி வாழ்க்கையை 2 பேர் தீர்த்துக் கட்டப் பார்த்தார்கள்.. கம்பீர் வெளியிட்ட பகீர் ட்வீட்!

டெல்லி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டி20 போட்டியில் அறிமுகம் ஆனார் நவ்தீப் சைனி.

தன் முதல் சர்வதேச போட்டியின், முதல் ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்து அனைவரையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினார் நவ்தீப் சைனி.

சைனி குறித்து கிரிக்கெட் உலகமே கொண்டாடி ட்வீட் போட்டுக் கொண்டு இருந்த அதே சமயம், சைனியின் வாழ்க்கையை தீர்த்துக் கட்டப் பார்த்த இருவர் குறித்து பகீர் ட்வீட் ஒன்றை வெளியிட்டார் கம்பீர்.

மூன்று விக்கெட்கள்

மூன்று விக்கெட்கள்

முதல் ஓவரில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்திய நவ்தீப் சைனி, இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதிலும், கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். தன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த நவ்தீப் சைனி, பல மோசமான நிகழ்வுகளை சந்தித்த பின்னரே கிரிக்கெட் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்.

கம்பீர் வெளியிட்ட ட்வீட்

அது குறித்து சைனி முதல் ஓவரை வீசி முடித்த உடன் பதிவிட்டார் கம்பீர். "உங்கள் அறிமுகப் போட்டிக்கு வாழ்த்துக்கள் சைனி. பவுலிங் போடும் முன்பே 2 விக்கெட்கள் வீழ்த்தி விட்டாய் - பிஷன் சிங் பேடி, சேத்தன் சிங் சௌஹான். தாங்கள் இரங்கல் எழுதிய ஒரு வீரர் அறிமுகம் ஆவதை பார்த்து அவர்களின் மிடில் ஸ்டம்ப் காலியாகி விட்டது. அவமானம்!" என கூறி இருக்கிறார் கம்பீர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

நவ்தீப் சைனி டென்னிஸ் பந்தில் ரூ.200க்காக கிரிக்கெட் ஆடி வந்தவர். அப்போது டெல்லி அணி வீரர்களுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது சைனியின் மின்னல் வேக பந்துவீச்சை கண்ட கம்பீர் அவருக்கு ஷூ வாங்கிக் கொடுத்து தொடர்ந்து பந்து வீச வருமாறு உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

டெல்லி கிரிக்கெட் சர்ச்சை

டெல்லி கிரிக்கெட் சர்ச்சை

ஆனால், அவருக்கு டெல்லி அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அப்போது டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த பிஷன் சிங் பேடி, துணை தலைவர் சேத்தன் சிங் சைனி டெல்லி அணியில் இடம் பெறக் கூடாது என நோட்டீஸ் அடித்து விநியோகித்ததாக கூறப்படுகிறது.

கம்பீர் போராட்டம்

கம்பீர் போராட்டம்

அப்போது கௌதம் கம்பீர் நவ்தீப் சைனிக்காக அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெரும் போராட்டத்துக்குப் பின் தான் சைனி வாய்ப்பு பெற்றார். அதன் பின் படிப்படியாக முன்னேறி இன்று இந்திய அணியின் பந்துவீச்சாளராக அறிமுகம் ஆகி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

நன்றி மறக்காத சைனி

நன்றி மறக்காத சைனி

இப்போதும் நன்றி மறக்காத சைனி, தன் கிரிக்கெட் வாழ்க்கையே கம்பீர் கொடுத்தது தான் என முன்பு பேட்டிகளில் கூறி இருக்கிறார். என் வெற்றிகள் எல்லாமே அவருக்கு தான் சொந்தம் என்றும் கூறி தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

Story first published: Saturday, August 3, 2019, 23:03 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+