For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்!

Recommended Video

IND VS WI 2019 | அஸ்வினை கழட்டி விட காரணம் கிடைச்சாச்சு. குலதீப்புக்கு தான் இடம்!- வீடியோ

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் அளிக்காதது கண்டு நேரலையில் வர்ணனை செய்து கொண்டு இருந்த கவாஸ்கர் புலம்பி இருக்கிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெறவில்லை. அவருக்கு அனுபவம் அதிகம் என்ற போதும், அவர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்ற போதும் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

குல்தீப் - அஸ்வின் குழப்பம்

குல்தீப் - அஸ்வின் குழப்பம்

முதல் போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய குல்தீப் யாதவ் மற்றும் அனுபவ பந்துவீச்சாளர் அஸ்வின் - இருவரில் யாரை கேப்டன் கோலி தேர்வு செய்வார் என்ற குழப்பம் இருந்தது.

ஷாக் கொடுத்த கோலி

ஷாக் கொடுத்த கோலி

ஆனால், அவர்கள் இருவரும் வேண்டாம் என முடிவு எடுத்த கோலி ரவீந்திர ஜடேஜாவை மட்டும் அணியில் தேர்வு செய்தார். இந்தியா ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்துடன் களமிறங்கியது.

அஸ்வின் இல்லையா?

அஸ்வின் இல்லையா?

அஸ்வின் அணியில் இடம் பெறாததை கண்ட ரசிகர்கள் பலரும் அஸ்வின் இல்லையா? என அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து கூறத் துவங்கினர். அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ரெக்கார்டு வைத்துள்ளார் என பலரும் சுட்டிக் காட்டினர்.

அதிரடி செயல்பாடு

அதிரடி செயல்பாடு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின். மேலும், அதே 11 போட்டிகளில் 4 சதங்கள் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 552 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 50 ஆகும்.

2016 டெஸ்ட் தொடர்

2016 டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா கடைசியாக 2016இல் ஆடியது. அப்போது நான்கு டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள், 17 விக்கெட்கள் அள்ளினார் அஸ்வின். அப்போது தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

கவாஸ்கர் புலம்பல்

கவாஸ்கர் புலம்பல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த மனிதன் இத்தனை சாதனை செய்தும், ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இது அதிர்ச்சியாக உள்ளது. ஆச்சரியமாக உள்ளது என நேரலை வர்ணனையில் புலம்பினார் கவாஸ்கர். இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது.

ரஹானே சமாளிப்பு

ரஹானே சமாளிப்பு

இது குறித்து முதல் நாள் ஆட்டதுக்குப் பின் பேசிய துணை கேப்டன் ரஹானே, அணியில் சமநிலை காரணமாக அஸ்வின் வெளியே அமர வைக்கப்பட்டார் என்று கூறி சமாளித்தார்.

Story first published: Friday, August 23, 2019, 13:00 [IST]
Other articles published on Aug 23, 2019
English summary
IND vs WI 2019 : Gavaskar stunned after Ashwin dropped for first test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+