Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி சதம் ஆஹா.. ஸ்ரேயாஸ் அரைசதம் ஓஹோ.. நல்ல ஸ்கோர் தான்.. ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 279 ரன்கள் குவித்தது.

இது நல்ல ஸ்கோர் தான் என்றாலும் இந்திய அணி 40 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து வந்த போது இருந்த வேகத்தை காட்டிலும் குறைவான ஸ்கோர் தான்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது இந்தியா. ரோஹித் சர்மா, தவான் அணிக்கு துவக்கம் அளித்தனர்.

துவக்கம் சொதப்பல்

துவக்கம் சொதப்பல்

தவான் போட்டியின் மூன்றாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து நிதானமாக ஆடி வந்த ரோஹித் சர்மா எப்படியும் வேகம் எடுப்பார் என காத்திருந்த போது 34 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பண்ட் அவுட்

பண்ட் அவுட்

அடுத்து வந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் நிதானமாக ஆட முயன்றாலும் 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கோலி மட்டுமே அணியின் நம்பிக்கையாக விளங்கினார்.

கோலி - ஸ்ரேயாஸ் கூட்டணி

கோலி - ஸ்ரேயாஸ் கூட்டணி

ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் கோலியுடன் இணைந்து பொறுப்பாகவும், விரைவாகவும் ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது.

கோலி சதம்

கோலி சதம்

விராட் கோலி ஐந்து மாதம் கழித்து சர்வதேச அரங்கில் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 42வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஸ்ரேயாஸ் அரைசதம்

ஸ்ரேயாஸ் அரைசதம்

ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 1 சிக்ஸ் மட்டுமே அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ஒற்றை ரன்கள் அடித்தும் ஸ்ட்ரைக் ரேட்டை நூறுக்கும் மேல் வைத்திருந்தார். இந்த இன்னிங்க்ஸ் மூலம் அணியில் தன் இடத்தை கிட்டத்தட்ட அடுத்த தொடர் வரை உறுதி செய்தார்.

கடைசியில் தடுமாற்றம்

கடைசியில் தடுமாற்றம்

ஸ்ரேயாஸ், கோலி சென்ற உடன் இந்திய அணியில் தடுமாற்றம் துவங்கியது. 42வது ஓவரில் ஜடேஜா - ஜாதவ் ஜோடி சேர்ந்தனர். ஜாதவ் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா, ஷமியை எதிரில் வைத்துக் கொண்டு ரன்னும் ஓட முடியாமல், பவுண்டரியும் அடிக்க முடியாமல் திணறினார்.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்

சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்

இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 279 ரன்கள் எடுத்து இருந்தது. ஜடேஜா 16*, ஷமி 3* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்த ஸ்கோர் போதுமானது என கூறப்படுகிறது. எனினும், இந்திய அணி 300 ரன்களை தொட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஜாதவ், ஜடேஜா பவுண்டரி அடிக்க திணறியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

Story first published: Sunday, August 11, 2019, 23:48 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+