செம ஷாக்! அதுக்குள்ள 3 விக்கெட்டா! புஜாரா, கோலி எல்லாம் காலி.. ஒரே ஓவரில் 2 விக்கெட் தூக்கிய ரோச்!
ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அதிர்ச்சி அளித்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது.
முதல் டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது இந்திய அணி.

டாஸ் தோல்வி
இந்தப் போட்டிக்கு முன்னதாக மழை பெய்ததால் போட்டி சில நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. டாஸ் வென்ற அணி நிச்சயம் பந்துவீச்சை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதே போல, வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவே இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

கோலியும் கை விட்டார்
எப்படியும் கோலி அணியை காப்பாற்றி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். 7 ரன்களுக்கு 2 விக்கெட்களும், 25 ரன்களுக்கு 3 விக்கெட்களையும் இழந்து தவித்தது இந்திய அணி.

அசத்திய ரோச்
அதன் பின் ரஹானே, ராகுல் நிதானமாக ஆடினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் அசத்தலாக செயல்பட்டு ஒரே ஓவரில் மாய்ங்க் அகர்வால், புஜாரா விக்கெட்டை வீழ்த்தினார். காப்ரியல், கோலி விக்கெட்டை சாய்த்தார்.

அணித் தேர்விலும் அதிர்ச்சி
பேட்டிங்கில் அதிர்ச்சி அளிக்கும் முன் கேப்டன் கோலி அணித் தேர்வில் அதிர்ச்சி அளித்தார். ரோஹித் சர்மா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. அதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்திய அணி விவரம்
இந்திய அணியில் ஆடும் வீரர்கள் விவரம் - மாயங்க் அகர்வால், கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா


Click it and Unblock the Notifications