
இந்தியா முதல் இன்னிங்க்ஸ்
இந்தியா முதல் இன்னிங்க்ஸில் முதலில் தடுமாறியது 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அப்போது ராகுல் 44, ரஹானே 81 ரன்கள் எடுத்து கை கொடுக்க இந்தியா 200 ரன்களை கடந்தது, அடுத்து ஜடேஜா 58 ரன்கள் எடுக்க இந்தியா 297 ரன்கள் குவித்தது. கீமர் ரோச் 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

வெ.இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸ்
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாகவே பேட்டிங் செய்து வந்தது. 174 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்தது. எனினும், இஷாந்த் சர்மாவிடம் சில ஓவர்கள் இடைவெளியில் 3 விக்கெட்களை இழந்து, பின்னர் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ரஹானே சதம்
75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ ஆடியது. ரஹானே சதம் அடித்து கலக்கினார். கடந்த இரு வருடங்களில் இது அவரது முதல் சதம் ஆகும். கோலி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்தியா இமாலய இலக்கு
ஹனுமா விஹாரி 93 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை ஏழு ரன்களில் தவறவிட்டார். இந்தியா அப்போது 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்து இருந்தது. அத்துடன் இந்தியா டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெ.இண்டீஸ் சரண்
பெரிய இலக்கு என்ற உடன் என்ன நினைத்ததோ, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவர்களாகவே விக்கெட்டை பறி கொடுத்தனர். பும்ரா 5 விக்கெட்களும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களும் அள்ளினர். 50 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். கீமர் ரோச் கடைசி நேரத்தில் 5 சிக்ஸர்கள் அடித்து அணியின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார்.

சாதனை வெற்றி
இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி படைத்தது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இது இந்திய அணி மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் போட்டியில் வெற்றி பெற்று 60 புள்ளிகள் பெற்றது இந்தியா.


Click it and Unblock the Notifications