Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெ.இண்டீஸ்-ஐ காலி செய்த அந்த பவுலர்.. பந்தை பறக்கவிட்ட இளம் வீரர்.. இந்தியா வென்றது இப்படித்தான்!

Recommended Video

IND VS WI 3RD T20 | 3-வது டி 20 போட்டியிலும் இந்தியா வென்றது- வீடியோ

பிராவிடன்ஸ் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அதே போல பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து இளம் வீரர் ஒருவர் பேட்டிங்கில் கலக்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டு தோல்வி அடைந்தது.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

முன்னதாக இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு தாமதமாக துவங்கியது. மழை பெய்ததால் அவுட் பீல்டு மோசமாக காட்சி அளித்தது. அங்கு தேங்கி இருந்த நீரை வெளியேற்ற தாமதம் ஆனது. அதனால் போட்டி சுமார் 1.15 மணி நேரம் தாமதமாக துவங்கியது. எனினும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

மூன்று புதிய வீரர்கள்

மூன்று புதிய வீரர்கள்

இந்தப் போட்டியில் மூன்று மாற்றங்களை செய்து இருந்தது இந்திய அணி. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் கலீல் அஹ்மது ஆகிய மூவரை நீக்கி விட்டு, கேஎல் ராகுல், ராகுல் சாஹர், தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றனர்.

வெ.இண்டீஸ் பேட்டிங்

வெ.இண்டீஸ் பேட்டிங்

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்கம் மிக மோசமாக இருந்தது. 14 ரன்களுக்கு 3 விக்கெட்ககளை தீபக் சாஹரிடம் இழந்தது அந்த அணி. அடுத்து பொல்லார்டு அபாரமாக ஆடி அரைசதம் அடித்து 58 ரன்களில் வெளியேறினார். பாவெல் அதிரடியாக 32 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழந்து 146 ரன்கள் எடுத்தது வெ.இண்டீஸ்.

தீபக் சாஹர் அருமை

தீபக் சாஹர் அருமை

தீபக் சாஹர் 3 ஓவர்கள் பந்து வீசி 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். நவ்தீப் சைனி 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தாலும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். தன் அறிமுகப் போட்டியில் ஆடிய ராகுல் சஹார் 1 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா சேஸிங்

இந்தியா சேஸிங்

147 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இந்திய அணிக்கு தவான் - ராகுல் துவக்கம் அளித்தனர். தவான் 3, ராகுல் 20 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த கோலி - ரிஷப் பண்ட் போட்டியை மாற்றினர்.

ரிஷப் பண்ட் அபாரம்

ரிஷப் பண்ட் அபாரம்

கோலி 59 ரன்களும், ரிஷப் பண்ட் 65* ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். ரிஷப் பண்ட் தன் இன்னிங்க்ஸில் 4 சிக்ஸர்கள் அடித்தார். கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸ் ஆகி வெற்றி பெற வைத்தார் பண்ட்.

வெற்றி

வெற்றி

இந்தியா 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3 - 0 என கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணி விபரம்

இந்திய அணி விபரம்

இந்திய அணி - தவான், ராகுல், கோலி, ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, க்ருனால் பண்டியா, வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி

வெ.இண்டீஸ் அணி விபரம்

வெ.இண்டீஸ் அணி விபரம்

வெ.இண்டீஸ் அணி - சுனில் நரைன், ஈவின் லீவிஸ், நிக்கோலஸ் பூரன், கீரான் பொல்லார்டு, ஷிம்ரான் ஹெட்மயர், கார்லோஸ் பிராத்வைட், ரோவ்மன் பாவெல், கீமோ பால், காட்ரல், ஓஷேன் தாமஸ், பாபியன் ஆலன்

Story first published: Wednesday, August 7, 2019, 1:15 [IST]
Other articles published on Aug 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+