Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித், தவானை கழட்டிவிட்டா தானே அவங்களை உள்ளே கூட்டிட்டு வர முடியும்.. இந்திய அணியில் அதிரடி!

பிராவிடன்ஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.

அதன் உச்சகட்டமாக, ஒரே நேரத்தில் ரோஹித் சர்மா - தவான் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

தொடரில் வெற்றி

தொடரில் வெற்றி

இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றி அசத்தி இருக்கிறது. அதனால், மூன்றாவது போட்டியில் இதுவரை வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டாவது போட்டி முடிந்த உடன் கோலி கொடா இது குறித்து பேசினார்.

வாய்ப்புக்கு காத்திருக்கும் வீரர்கள்

வாய்ப்புக்கு காத்திருக்கும் வீரர்கள்

இந்திய அணி 15 வீரர்கள் கொண்ட உத்தேச அணியுடன் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் 11 வீரர்கள் இடம் பெற்றனர். ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், தீபக் சாஹர், ராகுல் சாஹர் என நான்கு வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மூத்த வீரர்கள் நீக்கம்

மூத்த வீரர்கள் நீக்கம்

அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி, மூன்றாவது போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிக இளம் வீரர்கள் கொண்ட அணியை ஆட வைத்து பரிசோதனை செய்யும் முயற்சியாகவும் இது இருக்கும்.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

அதன்படி மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், ஜடேஜா நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரோஹித், தவான் இடத்தில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயரும், ஜடேஜா அல்லது க்ருனால் பண்டியா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் ராகுல் சாஹரும், புவனேஸ்வருக்கு பதில் தீபக் சாஹரும் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

ஒரே நேரத்தில் ரோஹித், தவான்

ஒரே நேரத்தில் ரோஹித், தவான்

ஒரே நேரத்தில் ரோஹித் சர்மா, தவான் அணியில் இருந்து நீக்கப்படுவார்களா? அந்த அளவுக்கு அதிரடி முடிவை எடுப்பாரா கேப்டன் கோலி? என்ற சந்தேகமும் உள்ளது. மேலும், ராகுல் மட்டுமே துவக்க வீரர். ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் தான் ஆடி வருகிறார். எனவே, மற்றொரு துவக்க வீரராக யாரை ஆட வைப்பது என்பதிலும் சிக்கல் எழும்.

கோலி ஆடுவாரா?

கோலி ஆடுவாரா?

கோலி துவக்க வீரராக களமிறங்கலாம். 2019 ஐபிஎல் தொடரில் கோலி துவக்க வீரராகத் தான் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மூத்த வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது போன்றே கோலியும் ஓய்வில் செல்ல வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, August 5, 2019, 16:20 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+