
அணி மாற்றம்
ஆனால். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் தொடர்ந்து பல வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உலகக்கோப்பை தொடரிலும் அது தான் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்திய அணித் தேர்வு கடும் விமர்சனத்தை எழுப்பியது.

ஷுப்மன் கில் எங்கே?
ஷுப்மன் கில் என்ற இளம் வீரர் இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடி வருகிறார். நீண்ட காலமாகவே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கூறி வந்தாலும், சில போட்டிகளில் ஆட மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை பரிசோதனை செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இவர்கள் ஏன் இல்லை?
உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற விஜய் ஷங்கர், மயங்க் அகர்வாலுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடமில்லை. விஜய் ஷங்கர் தன் உடற்தகுதியை நிரூபித்தும், அவரை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

சோர்ந்து போன வீரர்கள்
ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே இருவரும் பல முறை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், ஸ்ரேயாஸ் ஐயர் மனதளவில் சோர்ந்து போனதாக பேட்டியில் கூட முன்பு கூறி இருந்தார்.

கேதார் ஜாதவ்வுக்கு வாய்ப்பு
உலகக்கோப்பையில் சரியாக ஆடாத தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கேதார் ஜாதவ் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து ஆச்சரியம் அளித்தார். தேர்வுக் குழு எந்த எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு அணியை தேர்வு செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.

ஓய்வு பெறும் எண்ணம்
அம்பதி ராயுடுவை உலகக்கோப்பை வரை உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு என ஆசை காட்டி விட்டு, இடம் அளிக்காமல் அவரை ஓய்வு பெற வைத்தார்கள். 30 வயதுக்கு மேல் இருக்கும் பல வீரர்கள் அணியில் இடம் இல்லாமல், அம்பதி ராயுடு மனநிலையில் தான் இருக்கிறார்கள்.

வீரர்கள் ஏக்கம்
எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அணியில் இடம் கொடுக்க முடியாது என்றாலும், பார்மில் இல்லாத சில வீரர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு அளிக்கும் போதும், அனுபவம் இல்லாத வீரர்களை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து அணியில் எடுப்பதும், அவர்கள் சரியாக ஆடாத போது தூக்கி வீசப்படும் போதும், தங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாமே? என அணியில் வாய்ப்பு இல்லாதவர்கள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

வேண்டாத வீரர்கள்
தொடர்ந்து வீரர்களை சகட்டுமேனிக்கு மாற்றுவதும், பார்ம் இல்லாத வீரர்களை அணியில் வைத்துக் கொள்வதும், தங்களுக்கு வேண்டிய, வேண்டாத வீரர்கள் என பிரித்து அணி தேர்வு செய்வதும் எந்த வகையிலும் இந்திய அணிக்கு உதவாது.

முக்கிய தொடர்கள்
டி20 உலகக்கோப்பை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற உள்ளது. அதே போல இனி ஆடும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதி என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

யார் காரணம்?
ஆனால், இந்திய அணி நிலையாக இருந்தால் தான் வீரர்கள் மனதில் நம்பிக்கை இருக்கும். தேர்வுக் குழு தான் இந்த குழப்பங்களுக்கு காரணம் என கூறி விட முடியாது. அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. கேப்டன்- பயிற்சியாளர் சொல்லும் வீரர்கள் பட்டியலில் இருந்து தான் அவர்கள் வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என வரும் செய்திகளையும் நாம் மறுக்க முடியாது. இப்போதும் உஷாராகவில்லை என்றால், உலகக்கோப்பை அரையிறுதி போல, முக்கியமான நேரத்தில் இந்திய அணி சறுக்கி விடும்.


Click it and Unblock the Notifications