Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா தான் அப்படி செய்வாரா? நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி!

ஆன்டிகுவா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 222 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கில் அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடைசி நேரத்தில் ஜடேஜா போலவே ஆட்டமிழக்காமல் வீம்பு பிடித்து ஆடி அணியை ஓரளவு கரை சேர்த்தார். ஜடேஜா அளவுக்கு அவர் முன்னேறாத வகையில் ஷமி அவர் விக்கெட்டை எடுத்தார்.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் தடுமாறிய இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. கோலி, புஜாரா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். ரஹானே 81 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினார்.

ஜடேஜா அபாரம்

ஜடேஜா அபாரம்

அடுத்து ஜடேஜா கடைசி நேரத்தில் அணியை கரை சேர்க்கப் போராடினார். 207 ரன்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இஷாந்த் சர்மாவுடன் கூட்டணி சேர்ந்து 60 ரன்கள் சேர்த்தார். அடுத்து பும்ராவுடன் 10வது விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்தார். இந்த கடைசி நேர ரன்களால் இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.

தாக்குப் பிடித்த வெ.இண்டீஸ்

தாக்குப் பிடித்த வெ.இண்டீஸ்

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்திய அணி போல துவக்கத்தில் தடுமாறியது. 50 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. எனினும் 5 விக்கெட்கள் இழந்து 174 ரன்கள் வரை எடுத்தது.

இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள்

இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள்

அப்போது சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்களை எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

ஜேசன் ஹோல்டர் வீம்பு

ஜேசன் ஹோல்டர் வீம்பு

9வது விக்கெட்டுக்கு கேப்டன் ஜேசன் ஹோல்டர் - கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தனர். கம்மின்ஸ் ரன்னே அடிக்காமல் நீண்ட நேரம் களத்தில் நிற்க, ஜேசன் ஹோல்டர் மறுபுறம் ரன் குவித்தார்.

ஷமி விக்கெட்

ஷமி விக்கெட்

ஜடேஜா எப்படி இஷாந்த் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து அணியை கரை சேர்த்தாரோ, அதே போல ஆடினார் ஹோல்டர். 39 ரன்கள் எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை எடுத்து அனுப்பி வைத்தார் ஷமி. அடுத்த 2 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி விக்கெட்டையும் இழந்தது.

வெ.இண்டீஸ் ஸ்கோர்

வெ.இண்டீஸ் ஸ்கோர்

வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 179 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தாலும், ஜேசன் ஹோல்டர் ஆட்டத்தால் 222 ரன்கள் வரை சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் இன்னிங்க்ஸில் 75 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இஷாந்த் சர்மா 5, பும்ரா 1, ஷமி 2, ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

Story first published: Saturday, August 24, 2019, 23:06 [IST]
Other articles published on Aug 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+