For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம செஞ்சுரி.. கங்குலி, மியான்தத் சாதனை காலி.. கிங் கோலின்னா சும்மாவா? கொண்டாடும் ரசிகர்கள்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியை அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

கடந்த சில மாதங்களாக விராட் கோலி சதம் அடிக்காமல் இருந்தார். இந்த நிலையில், அந்த குறையைப் போக்கும் வகையில் சதம் அடித்தார் கோலி.

அவரது ரசிகர்கள் "கிங் கோலி" என ட்விட்டரில் அவரை கொண்டாடி வருகிறார்கள். ஒருநாள் போட்டிகளில் 42 சதம் என்பது இமாலய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சதம் இல்லாத உலகக்கோப்பை

சதம் இல்லாத உலகக்கோப்பை

2019 உலகக்கோப்பை தொடரில் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அந்த தொடரில் ஐந்து அரைசதம் அடித்த கோலி, அதில் சாதனை படைத்தார். ஆனால், சதம் அடிக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது.

அபார பேட்டிங்

அபார பேட்டிங்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்து அபாரமாக ரன் குவித்தார். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தவான் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கோலி பேட்டிங் செய்ய வந்தார்.

42வது சதம் அடித்தார்

42வது சதம் அடித்தார்

அட்டகாசமாக ஆடிய கோலி 111 பந்துகளில் சதம் கடந்தார். பின்னர் 120 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 14 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்த கோலி தன் 42வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்து இருந்தார்.

ஐந்து மாதம் ஆச்சு

ஐந்து மாதம் ஆச்சு

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் கோலி, கடந்த ஐந்து மாதங்களாக சதம் அடிக்காமல் இருந்து வந்தார். தற்போது இந்த சதம் மூலம் அந்தக் குறையைப் போக்கி உள்ளார்.

அதிக ரன்கள் சாதனை

அதிக ரன்கள் சாதனை

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1930 ரன்கள் குவித்து இருந்தார். இந்தப் போட்டியில் 19 ரன்களை கடந்த போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மியான்தத்தை முந்தி முதல் இடம் பிடித்தார்.

கங்குலியை முந்தினார்

கங்குலியை முந்தினார்

அதே போல, இந்திய அளவில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கங்குலியை முந்தி இரண்டாம் இடம் பிடித்தார் கோலி. கங்குலி 11,363 ரன்கள் குவித்து இருந்தார். அதை முந்திய கோலி, இந்தப் போட்டியில் அடித்த சதம் மூலம் 11,406 ரன்கள் குவித்து இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

Story first published: Sunday, August 11, 2019, 23:05 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
IND vs WI 2019 : Kohli hit 42nd century in the second ODI against West Indies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+