Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே அப்படி இருக்க முடியாது.. கேப்டன் பதவி போயிடும்.. கடும் சிக்கலில் கேப்டன் கோலி!

Recommended Video

Virat Kohli : கேப்டன் பதவி போயிடும்.. கடும் சிக்கலில் கேப்டன் கோலி!- வீடியோ

மியாமி : இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கடுமையாக அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு, கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொள்ளும் சிக்கலில் இருக்கிறார்.

இனி குறிப்பிட்ட தொடர்களில் வெற்றிகள் கிடைக்காமல் போனால், கேப்டன் பதவி பறிபோகும் நிலையும் ஏற்படலாம்.

அடுத்த கேப்டனாக அமர ரோஹித் சர்மா தயாராக இருக்கிறார். அவருக்கு பிசிசிஐ மட்டத்தில் ஆதரவும் உள்ளது.

உலகக்கோப்பை தோல்வி

உலகக்கோப்பை தோல்வி

இதற்கு மிக முக்கிய காரணம், 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியுடன் தோல்வி அடைந்து வெளியேறியது தான். அப்போது முதல் கோலியின் நிலைமை மாறிவிட்டது. முதலில் அணிக்குள் பிளவு என்ற வதந்திகள் (உண்மைகள்?) பரவின. அதை ஒரு கேப்டனாக சமாளிக்க வேண்டிய கட்டாயம் கோலிக்கு ஏற்பட்டது.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

மேலும், உலகக்கோப்பை தோல்வியை மனதில் வைத்து ஒருநாள் போட்டிகளில் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டது. பின்பு, அதையும் சமாளித்து கேப்டனாக தொடர்ந்து வருகிறார் விராட் கோலி.

இதுவரை இல்லாத அழுத்தம்

இதுவரை இல்லாத அழுத்தம்

கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொண்டாலும் கோலிக்கு இதுவரை இல்லாத அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் பல முக்கிய தொடர்களையும் ஒரு கேப்டனாக வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இதில் மிக முக்கியமாக 2020 உலகக்கோப்பை தொடரை வென்றால் மட்டுமே, 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பெற்ற அரையிறுதி தோல்வியை ஈடுகட்ட முடியும். அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கி இருக்கிறார் கோலி.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

அது மட்டுமின்றி இனி அடுத்த ஒரு ஆண்டுகளுக்கு நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியம். இனி பரிசோதனை செய்வது சாத்தியம் இல்லை.

கோலி என்ன செய்யப் போகிறார்?

கோலி என்ன செய்யப் போகிறார்?

கடந்த இரு ஆண்டுகளாக கேப்டன் பதவியில் கோலி நிம்மதியாக இருந்தார். வெற்றி - தோல்விகள் மாறி மாறி வந்தாலும், அவர் நிம்மதியாகவே இருந்தார். ஆனால், இனி தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை தான். என்ன செய்யப் போகிறார் கோலி?

Story first published: Saturday, August 3, 2019, 13:11 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+