For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப சொல்லுங்க.. கோலி ராசியில்லாத கேப்டனா? விடாமல் கெத்து காட்டிய கோலி.. எதில் தெரியுமா?

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கோலி கேப்டனாக டாஸ் விஷயத்தில் கோட்டை விட்டு வந்திருக்கிறார். அதனால், டாஸ் ராசியில்லாத கேப்டன் என்று கூட அழைக்கப்பட்டார்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதை தலை கீழாக மாற்றி இருக்கிறார் கோலி. இது குறித்து ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி டாஸ் வென்ற உடன் தான் இது குறித்த பேச்சு அதிகரித்தது.

டாஸ் ராசியில்லை

டாஸ் ராசியில்லை

கோலி கடந்த காலங்களில் பல முறை டாஸில் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரில் ஒரு டாஸ் கூட வெல்லாமல் அதிர்ச்சி அளித்துள்ளார். அதற்கு நேரடியாக அவர் காரணம் இல்லை என்றாலும், கோலிக்கு டாஸ் ராசியில்லை என்ற பெயர் கிடைத்தது.

தோல்விகளுக்கு காரணம்

தோல்விகளுக்கு காரணம்

சில சமயம் டாஸ் தோல்விகள் இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. டாஸில் வெற்றி பெறும் எதிரணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து போட்டியை அவர்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டதால், இந்திய அணி பின்னடைவை சந்தித்து வந்தது.

டி20 தொடரில் டாஸ்

டி20 தொடரில் டாஸ்

உலகக்கோப்பை தொடரில் டாஸில் வெற்றி - தோல்விகளை மாறி, மாறி பெற்றார் கோலி. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மொத்தமாக வெற்றி வாகை சூடினார். டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்றார் கோலி. அதனால், மழையால் பாதித்த அந்த போட்டிகளில் சாதகமான முடிவு எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

ஒருநாள் தொடரில் வெற்றி

ஒருநாள் தொடரில் வெற்றி

அடுத்து முதல் ஒருநாள் போட்டி மற்றும் இரண்டாம் ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்றார் கோலி. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்தி இருக்கிறார்.

இனிமேல் சொல்ல முடியுமா?

இனிமேல் சொல்ல முடியுமா?

இனிமேல் விராட் கோலியை டாஸ் ராசி இல்லாத கேப்டன் என கூற முடியாத அளவுக்கு டாஸ் வென்றுள்ளார் கோலி. அது அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Story first published: Sunday, August 11, 2019, 21:57 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
IND vs WI 2019 : Kohli won all 5 tosses in this tour so far
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+