Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்றாதீங்க குல்தீப்.. ஷமியை வீழ்த்த இப்படி ஒரு வாய்ப்பு இனிமே கிடைக்காது!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் முக்கிய சாதனை ஒன்றை செய்ய வாய்ப்பு உள்ளது.

முகமது ஷமி சமீபத்தில் செய்த அந்த சாதனையை முறியடிக்க குல்தீப் யாதவ்-க்கு இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது.

இந்திய - வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் அந்த முக்கிய சாதனையை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ் பார்ம்

குல்தீப் யாதவ் பார்ம்

குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை உச்சகட்ட பார்மில் இருந்தார். ஐபிஎல் தொடரில் அவரது பார்ம் பாதாளத்தை எட்டியது. உலகக்கோப்பை தொடரில் சராசரியாகவே பந்து வீசினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இதுவரை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

ஷமி செய்த சாதனை

ஷமி செய்த சாதனை

ஷமி உலகக்கோப்பை தொடரின் போது விக்கெட் வேட்டை நடத்தினார். அப்போது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விரைவாக 100 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார். 56 போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டி இருந்தார் ஷமி.

குல்தீப் யாதவ் செய்வாரா?

குல்தீப் யாதவ் செய்வாரா?

குல்தீப் யாதவ் தற்போது 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இன்னும் 2 போட்டிகளுக்குள் 4 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் ஷமியை முந்துவார் குல்தீப் யாதவ். இந்திய அளவில் விரைவாக 100 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.

இது அவசியம்

இது அவசியம்

குல்தீப் யாதவ் தற்போது பார்ம் இழந்து தவிக்கும் நிலையில், இரண்டு போட்டிகள் வரை காத்திராமல், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் கடைசி போட்டியிலேயே நான்கு விக்கெட்கள் எடுத்தால், அவருக்கு அது பெரிய திருப்பமாக இருக்கும்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்து இந்தியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. அணியில் ஏற்கனவே, ஜடேஜா, சாஹல் இருக்கும் நிலையில், டி20 அணியில் இடம் பெற்றுள்ள க்ருனால் பண்டியாவும் ஒருநாள் அணியில் நுழைய நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

அணியில் இடம்

அணியில் இடம்

அதனால், இந்தப் போட்டியில் 4 விக்கெட்கள் வீழ்த்தினால், சாதனை செய்வதோடு அணியில் தன் இடத்தையும் தக்க வைத்துக் கொள்வார் குல்தீப் யாதவ். குல்தீப் யாதவ் முன்பு போல விக்கெட் வேட்டை நடத்துவாரா?

Story first published: Wednesday, August 14, 2019, 12:44 [IST]
Other articles published on Aug 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+