Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மா ஒண்ணும் டக் அவுட் ஆகலை.. ரன்னே அடிக்காமல் சாதனை செய்து டீமை காப்பாற்றிய வெ.இண்டீஸ் வீரர்!

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் வீரர் மிகுவேல் கம்மின்ஸ் டக் அவுட் ஆனார். அவரது டக் அவுட்டிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தன் டக் அவுட் இன்னிங்க்ஸில் இரண்டு அரிய சாதனைகளையும் செய்தார் கம்மின்ஸ். அது கொஞ்சம் காமெடி சாதனை தான் என்றாலும், அணிக்கு பெரிய அளவில் உதவினார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 297 ரன்கள் எடுத்தது. ரஹானே 81, ஜடேஜா 58 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா 207 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது அப்போது ஜடேஜா - இஷாந்த் சர்மா 60 ரன்கள் சேர்த்து அணியைக் காப்பாற்றினர். கிட்டத்தட்ட அதே போன்ற இன்னிங்க்சை தான் கம்மின்ஸ் ஆடினார்.

வெ.இண்டீஸ் போராட்டம்

வெ.இண்டீஸ் போராட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்க்ஸில் சேஸ் 48 ரன்கள் சேர்த்தது மட்டுமே அதிகம். அனைத்து வீரர்களும் தடுமாறினார்.ஒருவர் கூட நீண்ட இன்னிங்க்ஸ் ஆடவில்லை. அந்த அணி 179 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது.

ஹோல்டர் - கம்மின்ஸ் கூட்டணி

ஹோல்டர் - கம்மின்ஸ் கூட்டணி

அப்போது கேப்டன் ஜேசன் ஹோல்டர் - மிகுவேல் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தனர். கம்மின்ஸ் ஒரு பக்கம் சும்மா நிற்க ஹோல்டர் ரன் அடித்தார். இப்படியே இந்த ஜோடி 41 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

45 பந்துகள் நின்றார்

45 பந்துகள் நின்றார்

கம்மின்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் 45 பந்துகளை சந்தித்தார். இறுதியில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ரன்னே எடுக்காவிட்டாலும் அணிக்கு உதவும் வகையில் ஆடிய அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்கள் சேர்த்தது. இந்தியா 75 ரன்கள் முன்னிலை பெற்றது.

2 சாதனைகள்

2 சாதனைகள்

கம்மின்ஸ் தன் 45 பந்து டக் அவுட்டில் இரண்டு சாதனைகள் செய்தார். அதிக பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனது மற்றும் அதிக நேரம் ரன்னே அடிக்காமல் களத்தில் நின்றது என இரண்டு சாதனைகளில் தன் பெயரை பொறித்தார்.

அதிக பந்துகள்

அதிக பந்துகள்

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிக பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை செய்தார் கம்மின்ஸ். இதற்கு முன் 2002இல் ஆர்தர்டன் 40 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனதே அதிகபட்சமாக இருந்தது.

அதிக நேரம்

அதிக நேரம்

அடுத்து டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் களத்தில் நின்ற வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார் கம்மின்ஸ். சுமார் 95 நிமிடங்கள் ரன்னே அடிக்காமல் களத்தில் நின்ற அவர், இந்த சாதனையை செய்தார். முதல் இடத்தில் ஜெப் அலாட் இருக்கிறார். அவர் 101 நிமிடங்கள் களத்தில் ரன் அடிக்காமல் நின்று இருக்கிறார்.

Story first published: Sunday, August 25, 2019, 10:33 [IST]
Other articles published on Aug 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+