Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்த்துக்கள் தம்பி.. இந்திய அணியில் இன்று அறிமுகம் ஆகப் போகும் இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு!

Recommended Video

Welcome Navedeep Saini : IND VS WI 2019 | இந்திய அணியில் இன்று அறிமுகம் ஆகப் போகும் சைனி- வீடியோ

பிராவிடன்ஸ் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் அந்த வீரருக்கு அதிக எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் சிறப்பான அறிமுகம் பெற்ற அந்த இளம் வீரர், ஒருநாள் தொடரிலும் கலக்குவாரா என அனைவரும் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒருநாள் தொடரில் இந்தியா

ஒருநாள் தொடரில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் பங்கேற்க உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஆட உள்ள முதல் ஒருநாள் தொடர் இது தான் என்பதால், எப்படி செயல்படப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

அதே போல, அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளது இந்திய அணி. அதற்கேற்ப உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கும் இளம் வீரர்களில் மூன்று அல்லது நான்கு வீரர்கள் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவ்தீப் சைனி அறிமுகம்

நவ்தீப் சைனி அறிமுகம்

குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இது அவரது ஒருநாள் போட்டி அறிமுகமாகவும் இருக்கும்.

டி20யில் அசத்தல்

டி20யில் அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான அறிமுகம் பெற்றார் நவ்தீப் சைனி. தன் முதல் சர்வதேசப் போட்டியின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

அதனால், ஒருநாள் தொடரில் நவ்தீப் சைனி அறிமுகம் செய்யப்பட்டால் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சைனியின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே ஒரு தவறு

ஒரே ஒரு தவறு

அவரது பந்துவீச்சின் முக்கிய விஷயம் அவரது வேகம் தான். மிக எளிதாக 140+ கிலோமீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசுகிறார். அதே சமயம், டி20 தொடரில் சைனி விக்கெட்கள் வீழ்த்தினாலும் ரன்களை வாரி இறைத்தார். அதை மட்டும் சரி செய்து கொள்ள வேண்டும்.

Story first published: Thursday, August 8, 2019, 12:21 [IST]
Other articles published on Aug 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+