Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம்.. அரைசதம்.. ரன் மழை.. இவங்க 2 பேரும் இருக்குற வரை இந்தியாவை டெஸ்டில் அசைக்க முடியாது!

கிங்க்ஸ்டன் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே - ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி இரண்டாம் இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்.

இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்ததும் இவர்கள் தான். முதல் டெஸ்ட் வெற்றிக்கு காரணமும் இவர்கள் இருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் டெஸ்டில் அபாரம்

இரண்டாம் டெஸ்டில் அபாரம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 416 ரன்கள் எடுத்தது. கோலி 76, மாயங்க் அகர்வால் 55 ரன்கள் எடுத்தாலும், இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட முக்கிய காரணம், ஹனுமா விஹாரி தான்.

ஹனுமா விஹாரி சதம்

ஹனுமா விஹாரி சதம்

விஹாரி அபாரமாக ஆடி, போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு சதம் அடித்தார். 225 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் பேட்ஸ்மேன் எப்படி ஆட வேண்டுமோ, அப்படி எந்த பதற்றமும் இன்றி, நிதானமாக ஆடினார். நவீன கிரிக்கெட்டின் டி20 ஷாட்களை எல்லாம் முயற்சி செய்யவில்லை.

இரண்டாம் இன்னிங்க்ஸில்

இரண்டாம் இன்னிங்க்ஸில்

இந்தியா 299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கினாலும், 36 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. கோலி முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ராகுல் 6, மாயங்க் அகர்வால் 4, புஜாரா 27 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கை கொடுத்தனர்

கை கொடுத்தனர்

அப்போது ஹனுமா விஹாரி - ரஹானே கை கொடுத்தனர். இருவரும் நிலைத்து நின்று ஆடினர். அரைசதமும் கடந்தனர். ரஹானே 64, ஹனுமா விஹாரி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெற்றிக்கு அருகே இந்தியா

வெற்றிக்கு அருகே இந்தியா

இந்தியா 168 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் 45 ரன்களுக்கு 2விக்கெட்கள் இழந்தது. இந்தியா வெற்றிக்கு அருகே உள்ளதாகவே கருதப்படுகிறது.

முதல் டெஸ்ட் வெற்றி

முதல் டெஸ்ட் வெற்றி

இரண்டாவது டெஸ்டின் வெற்றி பெற்றால் பும்ரா தான் அதற்கு முக்கிய காரணம் என்றாலும், ரஹானே, விஹாரிக்கும் அதில் பங்கு உண்டு. முதல் டெஸ்டிலும் அவர்கள் தான் வெற்றிக் கனியை பறிக்க முக்கிய காரணமாக இருந்தனர்.

ரஹானே சதம்

ரஹானே சதம்

முதல் டெஸ்டில் ரஹானே முதல் இன்னிங்க்ஸில் 81 ரன்கள், விஹாரி 32 ரன்கள் குவித்தனர். ரஹானே இரண்டாம் இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ரஹானே சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஹாரி 93 ரன்கள்

விஹாரி 93 ரன்கள்

அவருடன் கூட்டணி சேர்ந்து ஆடிய ஹனுமா விஹாரி 93 ரன்கள் எடுத்து ஏழு ரன்களில் தன் முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். எனினும், இரண்டாம் டெஸ்டில் அந்த குறையைப் போக்கினார்.

தொடரில் அதிகம்

தொடரில் அதிகம்

இது மட்டுமின்றி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் இவர்கள் இருவர் தான் அதிக ரன்கள் குவித்துள்ளனர். 2 டெஸ்ட் போட்டிகளில் விஹாரி 289 ரன்களும், ரஹானே 271 ரன்களும் அடித்துள்ளனர். இருவரும் தலா 1 சதமும், இரண்டு அரைசதங்களும் அடித்து இருகின்றனர்.

புதிய முன்னேற்றம்

புதிய முன்னேற்றம்

இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா, விராட் கோலி மட்டுமே நம்பிக்கை நாயகர்களாக இருந்த நிலையில், ஹனுமா விஹாரி, ரஹானே புதிய நம்பிக்கை அளித்துள்ளனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெற்றி வாகை சூட இது நல்ல முன்னேற்றமாக இருக்கும்.

Story first published: Monday, September 2, 2019, 11:20 [IST]
Other articles published on Sep 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+