Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க தான் ஜோடி நம்பர் 1.. சச்சின், கங்குலி சாதனையை கூட்டணியாக காலி செய்த கோலி - ரஹானே!

Recommended Video

ஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane

ஆன்டிகுவா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலியின் நீண்ட நாள் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்தது கோலி, ரஹானே ஜோடி.

நான்காவது விக்கெட்டுக்கு அதிக முறை நூறுக்கும் அதிகமான ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை செய்துள்ளனர் கோலி - ரஹானே.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இரண்டாம் இன்னிங்க்ஸ்

இரண்டாம் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 297 ரன்களும், வெ.இண்டீஸ் 222 ரன்களும் குவித்தன. 75 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடியது. ராகுல், மாயங்க் அகர்வால், புஜாரா குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 81 ரன்களில் 3 விக்கெட்களை இழந்தது இந்தியா.

கோலி - ரஹானே ஜோடி

கோலி - ரஹானே ஜோடி

அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் - துணை கேப்டன், அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கோலி 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது.

சாதனை செய்தது

சாதனை செய்தது

இதுவரை எட்டு முறை கோலி - ரஹானே ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 100+ ரன்கள் சேர்த்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் ஒன்பது முறை 100+ ரன்கள் சேர்த்துள்ளது இந்த ஜோடி. மேலும், 4வது விக்கெட்டுக்கு அதிக முறை 100+ ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை செய்துள்ளது இந்த ஜோடி.

கங்குலி - சச்சின் சாதனை

கங்குலி - சச்சின் சாதனை

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலி 4வது விக்கெட்டுக்கு ஏழு முறை 100+ ரன்கள் சேர்த்ததே இந்திய அளவில் சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளது ரஹானே - கோலி ஜோடி.

ரஹானே சதம்

ரஹானே சதம்

மேலும், இந்தப் போட்டியில் ரஹானே சதம் அடித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம், தன் மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தியா சாதனை வெற்றி

இந்தியா சாதனை வெற்றி

அதே போல, இந்தியா இந்தப் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இமாலய சாதனை செய்தது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி பெற்ற பெரிய வெற்றி ஆகும்.

Story first published: Monday, August 26, 2019, 11:03 [IST]
Other articles published on Aug 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+