Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை நம்புனதுக்கு 2 டி20யிலும் வைச்சு செஞ்சிட்டீங்களே தம்பி? இளம் வீரருக்கு கண்டம் ஆரம்பம்!

ப்ளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு போட்டிகளை வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றினாலும் இளம் வீரர் ஒருவர் கண்டத்தில் சிக்கி இருக்கிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது.

அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பண்ட் பொறுப்பாக பேட்டிங் செய்யவில்லை.

தோனிக்கு அடுத்து

தோனிக்கு அடுத்து

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தோனி விலகியதை அடுத்து, எதிர்கால திட்டமாக இளம் வீரர் ரிஷப் பண்ட் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று அணிகளிலும் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்றார்.

தோனிக்கே இடம் இல்லை

தோனிக்கே இடம் இல்லை

தோனி மீண்டும் ஆட வந்தால் அவருக்கு கூட விக்கெட் கீப்பர் இடத்தை கொடுக்க முடியாது என்ற அளவுக்கு ரிஷப் பண்ட்டுக்கு பில்டப் அப் கொடுக்கப்பட்டது. அதற்கேற்ப பண்ட் தன் விக்கெட் கீப்பிங் திறன்களை வளர்த்துக் கொண்டார்.

முதல் போட்டி சொதப்பல்

முதல் போட்டி சொதப்பல்

ஆனால், அவரது பேட்டிங் திறனுக்கு தான் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ஆதரித்த ரசிகர்கள்

ஆதரித்த ரசிகர்கள்

அப்போது கூட சில ரிஷப் பண்ட் ரசிகர்கள் "இது தான் ரிஷப் பண்ட் ஸ்டைல். அவர் அடிப்பார் இல்லை அவுட் ஆவார்" என அவருக்கு ஆதரவாக இணையத்தில் கருத்து கூறி வந்தனர்.

2ஆம் போட்டியில் என்ன செய்தார்?

2ஆம் போட்டியில் என்ன செய்தார்?

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில் ரிஷப் பண்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு போட்டியில் அடித்து ஆட ஆசைப்பட்டு ஆட்டமிழந்தால் பரவாயில்லை. ஆனால், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்துள்ளார்.

ரசிகர்கள் விரக்தி

ரசிகர்கள் விரக்தி

ரசிகர்கள் பலர் இணையத்தில் ரிஷப் பண்ட் குறித்து விமர்சித்து கருத்து கூறி வருகின்றனர். பொறுப்பான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தான் அணிக்கு தேவை என கூறி வருகின்றனர். இதனால், ரிஷப் பண்ட்டுக்கு இப்போதைக்கு ரசிகர்கள் அளவில் எதிர்ப்பு கிளம்பத் துவங்கி உள்ளது.

கண்டம் ஆரம்பம்

கண்டம் ஆரம்பம்

அணி நிர்வாகம் அவரைக் குறித்து கவலைப்படத் துவங்க அதிக காலம் ஆகாது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில போட்டிகளிலாவது பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டால், ரிஷப் பண்ட்டுக்கு சிக்கல் தான்.

Story first published: Monday, August 5, 2019, 11:43 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+