Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு நொடி.. தோனியின் காதலை பாருங்க.. நெகிழ்ந்து உருகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

Recommended Video

Cottrell praises Dhoni | அந்த ஒரு நொடி..நெகிழ்ந்து உருகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

ஜமைக்கா : வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரல், தோனி குறித்து நெகிழ்ந்து, உருகி ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தோனியின் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு, அது குறித்து தன் கருத்தை கூறி மற்றவர்களும் அந்த வீடியோவை பார்க்க வேண்டும் என கூறி இருக்கிறார் ஷெல்டன் காட்ரல்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்திய அணி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என நீண்ட தொடராக இது நடைபெற உள்ளது.

இராணுவத்தில் தோனி

இராணுவத்தில் தோனி

இந்த தொடரில் மூத்த வீரர் தோனி பங்கேற்கவில்லை. இரண்டு மாத காலம் இராணுவத்தில் பணிபுரிய உள்ளதாகக் கூறி, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் தோனி. 16 நாட்கள் தரைப்படையுடன் இணைந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்.

ஷெல்டன் காட்ரல்

ஷெல்டன் காட்ரல்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரலுக்கும் இராணுவத்துக்கும் கூட நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் கிரிக்கெட் விளையாடும் முன்பு சுமார் ஆறு மாதங்கள் இராணுவத்தில் பணியாற்றினார். அப்போது கற்றுக் கொண்ட இராணுவ சல்யூட்டை விக்கெட் எடுத்தவுடன் செய்து காட்டுவார். அதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.

என்ன பதிவு?

என்ன பதிவு?

இந்த நிலையில், தோனி கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி கையால் பத்ம பூஷன் விருது பெற்றார். அப்போது தான் கௌரவ லெப்டினன்ட் கலோனல் என்பதால் இராணுவ உடை அணிந்து அந்த விருது விழாவில் பங்கேற்றார். அதை பகிர்ந்த ஷெல்டன் காட்ரல், அந்த வீடியோவில் ஒரு நொடி வரும் காதலை கவனித்து சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அந்த காதல்

அந்த வீடியோவில் தோனியின் மனைவி சாக்ஷி, தோனியை பெருமையுடன் பார்க்கும் காட்சி ஒன்று இருக்கும். அதை தான் சுட்டிக் காட்டி இருக்கிறார் காட்ரல். தன் பதிவில், எனக்கு இராணுவ மரியாதை எந்த அளவுக்கு பெருமைப்படத்தக்க விஷயம் என்பது என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியும். அவர்களிடம் இந்த வீடியோவை பகிர்ந்தேன். ஆனால், மனைவி - கணவன் இடையே ஆன அந்த தருணம் ஒரே சமயத்தில் நாட்டின் மீதான காதலையும், துணையின் மீதான காதலையும் காட்டுகிறது என கூறி இருக்கிறார்.

சென்னையில் தோனி

சென்னையில் தோனி

அங்கே வெஸ்ட் இண்டீஸ் வீரர் தோனியின் காதலை பற்றி பேசிக் கொண்டு இருக்க, தோனி இங்கே சென்னையில் கல்யாணம் பற்றி பேசினார். கல்யாணம் ஏன் அவசியம் என்பது குறித்து சென்னையில் பேசினார் தோனி.

கல்யாணம் ஏன் அவசியம் தெரியுமா? சென்னையில் தோனி வைரல் பேச்சு.. அப்ப இராணுவம்? - VIDEO

Story first published: Monday, July 29, 2019, 10:21 [IST]
Other articles published on Jul 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+