Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சு.. தவான் மறுபடியும் வந்துட்டாரு.. அப்ப அவரை கழட்டி விட வேண்டியது தான்!

Recommended Video

Dhawan coming back : தவான் வருகை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்- வீடியோ

பிராவிடன்ஸ் : தவானுக்கு அணியில் இடம் கொடுக்க வேறு ஒரு வீரரை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி கயானாவில் இன்று தொடங்குகிறது.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்தியா ஆட உள்ள முதல் ஒருநாள் போட்டி இது தான். இந்த தொடரில் தவான் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார் என்பதால், பேட்டிங் வரிசையில் உலகக்கோப்பை தொடரில் ஆடிய ஒரு வீரரை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி.

தவான் காயம்

தவான் காயம்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் காயம் அடைந்தார். அதனால், தொடரின் பாதியிலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார். அது உலகக்கோப்பை தொடரில் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

ராகுல் துவக்க வீரர்

ராகுல் துவக்க வீரர்

தவானுக்கு பதில் அப்போது மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த மாற்று துவக்க வீரர் ராகுல் அணியில் இடம் பெற்றார். அவர் துவக்க வீரராக சிறப்பாகவே ஆடினார். எனினும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரால் தொடர்ந்து துவக்க வீரராக களமிறங்க முடியாத நிலை இருக்கிறது.

மீண்டும் தவான்

மீண்டும் தவான்

தவான் தற்போது காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பங்கேற்றார். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளார் தவான். தவானுக்கு ஒருநாள் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்றால் பேட்டிங் வரிசையில் உலகக்கோப்பை தொடரில் ஆடிய ஒரு வீரரை மாற்ற வேண்டும்.

ராகுல் நிச்சயம் வேண்டும்

ராகுல் நிச்சயம் வேண்டும்

தற்போது அணியில் மிடில் ஆர்டரில் ஆட மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மிடில் ஆர்டரில் ஆட இடம் கொடுக்கப்படும். அதே போல ராகுல் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் நான்காம் வரிசை வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

யார் நீக்கம்?

யார் நீக்கம்?

ரோஹித் சர்மா - தவான் துவக்க வீரர்கள், அடுத்து கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் / மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் என ஆறு பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற வேண்டும். அடுத்து ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் நான்கு முழு நேர பந்துவீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டும். எனவே, ஆல்-ரவுண்டராக அணியில் இருந்தாலும், அதிகம் பந்து வீசாத கேதார் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

மேலும், கேதார் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் சொதப்பினார். அவரை ஏன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்தார்கள் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், அவர் ஆல்-ரவுண்டராக முழுமையாக செயல்படுவதும் இல்லை. கோலி பந்து வீச்சில் ஜாதவ்வை நம்புவதில்லை. எனவே, அவரை அணியில் இருந்து நீக்கவே வாய்ப்பு அதிகம்.

அணியில் ஜடேஜா

அணியில் ஜடேஜா

ஜடேஜா ஆல்-ரவுண்டராக அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம். மற்ற நான்கு பந்துவீச்சாளர்களாக சாஹல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, நவ்தீப் சைனி / கலீல் அஹ்மது இடம் பெறுவார்கள்.

Story first published: Thursday, August 8, 2019, 10:16 [IST]
Other articles published on Aug 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+