For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் ஓவரிலேயே வெடித்த சர்ச்சை.. தவான் அவுட் தான்.. ஆனால் அம்பயர் முடிவு தப்பு.. என்ன நடந்தது?

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் விக்கெட்டில் சர்ச்சை எழுந்தது.

விதிக்கு மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேட்ட டிஆர்எஸ்-ஐ அம்பயர் ஒப்புக் கொண்டார். இதனால், சர்ச்சை ஏற்பட்டது.

அம்பயர்கள் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், டிஆர்எஸ் மூலம் ஒரு தவறு செய்துள்ளார் அம்பயர் நீகல் லாங்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. இரண்டாவது பாதியில் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று கூறிய கேப்டன் கோலி பேட்டிங் செய்தார். ரோஹித் சர்மா - ஷிகர் தவான் துவக்கம் அளிக்க வந்தனர்.

தவான் தடுமாற்றம்

தவான் தடுமாற்றம்

2019 உலகக்கோப்பை தொடரில் காயத்தால் விலகிய தவான், அதன் பின் ஆடும் முதல் ஒருநாள் போட்டி இது தான். ஷெல்டன் காட்ரல் வீசிய முதல் ஓவரை சந்தித்தார் தவான். முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தை கணிக்கத் தவறினார்.

அவுட் தர மறுப்பு

அவுட் தர மறுப்பு

பந்து தவான் காலில் பட்டது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எல்பிடபுள்யூ அவுட் கேட்டனர். பந்து பேட்டில் பட்டதாக கருதிய அம்பயர் அவுட் தர மறுத்தார். எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணி உறுதியாக இருந்தது.

நேரம் கடந்த டிஆர்எஸ்

நேரம் கடந்த டிஆர்எஸ்

அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்ற வீரர்களுடன் விவாதித்தார். அதனால், நேரம் கடந்து கொண்டே சென்றது. டிஆர்எஸ் கேட்க வேண்டிய நேரத்தை கடந்த பின் டிஆர்எஸ் கேட்டார் ஜேசன் ஹோல்டர். நேரத்தை கவனிக்காத அம்பயர் லாங் மூன்றாவது அம்பயருக்கு சைகை காட்டினார்.

அவுட் கொடுக்கப்பட்டது

அவுட் கொடுக்கப்பட்டது

ரிவ்யூவில் பந்து தவான் காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. மேலும், பந்து ஸ்டம்ப்பில் படுவதும் தெரிந்தது. அதனால், அவுட் கொடுக்கப்பட்டது. தவான் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். தவான் அவுட் தான் என்றாலும், விதிப்படி அம்பயர் டிஆர்எஸ் கேட்க மறுத்து இருக்க வேண்டும்.

குழப்பம் தான் காரணமா?

குழப்பம் தான் காரணமா?

அம்பயர் நேரத்தை கவனிக்காமல் டிஆர்எஸ் கேட்க ஒப்புக் கொண்டது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், போட்டியின் முதல் ஓவரிலேயே சர்ச்சை எழுந்தது. இது குறித்து இந்திய அணி அறியாததால் அப்போது எந்த எதிர்ப்பும் எழவில்லை. போட்டி முடிந்த பின்னர் கேப்டன் கோலி என்ன சொல்லப் போகிறார்?

Story first published: Sunday, August 11, 2019, 20:09 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
IND vs WI 2019 : Controversy erupts as West Indies call for DRS accepted after timer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+