டீம்ல இடம் கிடைச்சுருச்சு.. இருந்தாலும் மனம் வெறுத்து புலம்பும் இளம் வீரர்.. காரணம் அந்த 2 பேர்!
Recommended Video
மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தன் நிலைமையை எண்ணி புலம்பி இருக்கிறார்.
இந்திய அணியில் நீண்ட காலம் கழித்து வாய்ப்பு பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். அணியில் இடம் பிடித்து விட்டோம் என குஷியாக இருப்பார் என எண்ணிய நிலையில், பெரிய சோகத்தை வெளிப்படுத்தி அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்திய வீரர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்றே உதாரணம். இதற்கெல்லாம் காரணம் அந்த இருவர் எடுக்கும் முடிவுகள் தான்.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் அறிமுகம் ஆனார். எனினும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட திட்டமிடப்பட்டு அதன் முதல்கட்டமாக ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே உள்ளிட்டோர் அணியில் வாய்ப்பு பெற்றனர்.

தொடர்ந்து ஏமாற்றம்
2017 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் தான் ஆடி உள்ளார். இரண்டு, மூன்று முறை அணியில் தேர்வு செய்யப்பட்டு பின் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து வந்தாலும், அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தார்.

நீடித்த வாய்ப்பு வேண்டும்
இந்த நிலையில், தற்போது அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் பேட்டியின் போது தன் மனக்குமுறலை கொட்டி புலம்பி இருக்கிறார். அணியில் வருவதும், போவதுமாக இருந்தால் நம் மீது நமக்கே அவநம்பிக்கை வந்துவிடும். ஒருவர் திறமையானவர் என்றால், அவருக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

பொறுமை போயிடும்
உங்களுக்கு பொறுமை போய் விடும். ஆனால், தேர்வு உங்கள் கையில் இல்லை. நம்மால் செய்ய முடிந்தது நன்றாக விளையாடுவது மட்டுமே. அதைத் தான் நான் அனுபவித்து செய்து வருகிறேன் என கூறி தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

உலகக்கோப்பை வாய்ப்பு
உலகக்கோப்பை தொடருக்கு முன்பு ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக தகவல்கள் கிடைத்தன. எனினும், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை இந்த இளம் வயதிலும் பிளே-ஆஃப் அவரை அழைத்துச் சென்றார்.

காரணம் யார்?
ஆனால், இன்னும் அவருக்கு இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை இப்படி புலம்ப வைத்துள்ளது கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே.

மனநிலையை பாதிக்கும்
அவர்களது செயல் திட்டப்படி அணியை ஒவ்வொரு தொடரிலும், போட்டியிலும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அது வீரர்கள் மனநிலையை பாதிக்கும் என பலரும் கூறியும் அது நின்றபாடில்லை. இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் புலம்பி உள்ளது அந்த பாதிப்பின் ஒரு பகுதி தான்.


Click it and Unblock the Notifications