Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி!

கூலிட்ஜ் : துணை கேப்டன் ரஹானேவை அணியில் இருந்து நீக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் கேப்டன் கோலி.

இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன் பதவியில் இருக்கும் அஜின்க்யா ரஹானேவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் உறுதி செய்யப்படவில்லை.

அவர் முதல் டெஸ்டில் களமிறங்குவாரா? என்பதும் சந்தேகம் தான். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்றாலும், அவர் கடும் சிக்கலில் தான் இருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கோலி துணை கேப்டன் ரஹானேவை நீக்கவே வாய்ப்பு அதிகம்.

ரஹானே பார்ம் அவுட்

ரஹானே பார்ம் அவுட்

ரஹானே கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை. சில போட்டிகளில் ரன் எடுப்பதும், பல போட்டிகளில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பதுமாக இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அவர் அதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்தார். ஆனால், மூன்று முறை டக் அவுட் ஆனார். நான்கு முறை ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தார்.

2 ஆண்டுகளில் எடுத்த ரன்கள்

2 ஆண்டுகளில் எடுத்த ரன்கள்

கடந்த இரு ஆண்டுகளில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 28 இன்னிங்க்ஸ்களில் 696 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரஹானே. துணை கேப்டன் என்பதாலும், இந்தியா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை குவித்து வந்ததாலும் தப்பித்து வந்தார்.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா பங்கேற்ற பயிற்சிப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 1 ரன்னும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 54 ரன்களும் எடுத்தார் ரஹானே. தொடர்ச்சியாக ரன் குவிப்பதில் சிக்கல் இருப்பதை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டி இருக்கிறார்.

ரோஹித் - ஹனுமா விஹாரி

ரோஹித் - ஹனுமா விஹாரி

பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி மிடில் ஆர்டரில் இடம் பெறவே அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு குறைவு தான்.

நீக்க வாய்ப்பு

நீக்க வாய்ப்பு

இரண்டு போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரஹானே வாய்ப்பு பெறாமல் போகலாம். ரோஹித் சர்மா- ஹனுமா விஹாரி இருவரும் அணியில் இடம் பெற்றால், ரஹானே வெளியில் தான் அமர வேண்டும்.

ஆடவும் வாய்ப்பு உண்டு

ஆடவும் வாய்ப்பு உண்டு

எனினும், ரோஹித் சர்மாவை வெளியேற்றி விட்டு அல்லது துவக்க வீரர் ராகுலை நீக்கி விட்டு ரஹானேவுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படலாம். ராகுலுக்கு பதில் இடம் பெற்றால், ரஹானே துவக்க வீரராக ஆடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே கடைசி

இதுவே கடைசி

ஒருவேளை ரஹானே வாய்ப்பு பெற்றாலும், இந்த வாய்ப்பில் தொடர்ந்து ரன் குவித்து தன்னை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இது தான் ரஹானேவின் கடைசி தொடர். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக பரிசோதனை முயற்சிகள் செய்ய முடியாது என்பதால் ரஹானேவின் துணை கேப்டன் பதவியோடு, அணியில் இருந்து மொத்தமாக நீக்கப்படவே வாய்ப்பு உண்டு.

Story first published: Wednesday, August 21, 2019, 14:23 [IST]
Other articles published on Aug 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+