Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த கிங் கோலி.. கங்குலியின் ரெக்கார்டை தூக்கி அடித்தார் - முழு விவரம்!

Recommended Video

Kohli beat Ganguly record | சச்சினுக்கு அடுத்த இடத்தில் கோலி.. கங்குலியின் சாதனை முறியடிப்பு-வீடியோ

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கோலி, பல சாதனைகளை செய்துள்ளார்.

அதில் முக்கியமாக கங்குலியின் ஒருநாள் போட்டி சாதனை ஒன்றை முந்தி அசத்தி இருக்கிறார் கோலி. சச்சினுக்கு அடுத்து கோலி தான் இந்திய அளவில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை மீண்டும் ஒருமுறை ஆழமாக பதிய வைத்துள்ளார் ரன் மெஷின் கோலி.

அசத்தல் பேட்டிங்

அசத்தல் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித், தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கோலி அணியின் பேட்டிங்கை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

கோலி சதம்

கோலி சதம்

111 பந்துகளில் சதம் கடந்த கோலி 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் இது கோலியின் 42வது சதம் ஆகும். ஐந்து மாதங்கள் கழித்து சதம் அடித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் இப்போது தான் சதம் அடித்துள்ளார். இடையே நடந்த உலகக்கோப்பை தொடரில் அரைசதங்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

கங்குலி சாதனை

கங்குலி சாதனை

இந்த சதத்திற்கு முன்பே சில சாதனைகளை சிதறடித்தார் கோலி. குறிப்பாக இந்திய அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கங்குலியை முந்தி இருக்கிறார். கங்குலி 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள் குவித்து இருந்தார்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

தற்போது கோலி 238 ஒருநாள் போட்டிகளில் 11,406 ரன்கள் குவித்து கங்குலியை முந்தி இருக்கிறார். இந்திய அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் கோலி. சச்சின் 18,426 ஒருநாள் போட்டி ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலி பாராட்டு

கோலி தன் சாதனையை முறியடித்த அடுத்த கணமே, கங்குலி ட்விட்டரில் கோலிக்கு தன் பாரட்டுக்களை தெரிவித்தார். ஒருநாள் போட்டிகளில் கோலி மற்றொரு மாஸ்டர் கிளாஸ் என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். இந்திய அளவில் சச்சினுக்கு அடுத்து கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மியான்தத்-ஐ முந்தி முதல் இடத்தை பிடித்தார் கோலி. மியான்தத் 1931 ரன்கள் எடுத்து இருந்தார். அதை கடந்து அசத்தினார் கோலி.

Story first published: Monday, August 12, 2019, 10:23 [IST]
Other articles published on Aug 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+