என்னப்பா ஆச்சு இவருக்கு? போட்டிக்கு முன்பே உல்ட்டா முடிவு எடுத்து ஷாக் கொடுத்த கேப்டன் கோலி #INDvsWI
ப்ளோரிடா : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக எடுத்த முடிவால் இரண்டாவது டி20 போட்டி துவங்கும் முன்பே ரசிகர்களும், விமர்சகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோலி எடுத்த டாஸ் முடிவு சரியாக இருக்குமா? என பலரும் போட்டிக்கு முன்பே கேள்வி எழுப்பத் துவங்கினர். முதல் போட்டி போன்றே, இந்தப் போட்டியிலும் பிட்ச் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் வெற்றி முக்கியமாக கருதப்பட்டது.

முதல் போட்டி பிட்ச்
முந்தைய தினம் நடைபெற்ற முதல் போட்டிக்கு முன் மழை பெய்து பிட்ச் ஈரப்பதமாக இருந்தது. அதனால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சிரமமாக இருக்கும் என கருதப்பட்டது. அதனால், அப்போது டாஸ் வென்ற கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆடுகளம் எப்படி?
இரண்டாவது போட்டிக்கு முந்தைய நாள் இரவும் மழை பெய்தது. அதனால், ஆடுகளம் ஆங்காங்கே ஈரப்பதமாக இருந்தது. முதல் போட்டி போலவே பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என முன்னாள் வீரர்கள் கூறினர்.

விமர்சகர்கள் கருத்து
அதனால், இப்போதும் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என விமர்சகர்கள் கூறி இருந்தனர். அதனால், கோலி டாஸ் வெல்ல வேண்டும், அப்போது தான் முதலில் பந்து வீசலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

கோலி எடுத்த முடிவு
ஆனால், டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்து எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார். தன் முடிவு குறித்து பேசிய கோலி, இப்போது பிட்ச் நன்றாக இருக்கிறது. நேற்று இருந்த ஈரப்பதம் இப்போது இல்லை. மேலும், பிட்ச் செல்லச் செல்ல மந்தமாக மாறி விடும் என கருதுகிறோம் என்றார்.

வெற்றி பெறலாம்
கோலி எடுத்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், இந்திய அணியின் திட்டம் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. டி20 போட்டியில் வெற்றி - தோல்வி சில ஓவர்களில், சில பந்துகளில் மாறி விடும் என்பதால் கோலி எடுத்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறலாம்.


Click it and Unblock the Notifications