Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த குறி இது தான்.. பாக், வீரரின் 26 வருட சாதனை காலி.. கெத்து காட்டப் போகும் கோலி! #INDvsWI

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி முக்கியமான சாதனை ஒன்றை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து இருக்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் புதிய சாதனை படைக்க உள்ளார்.

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் சாதனையை முறியடிக்க இருக்கிறார் விராட் கோலி.

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன கிரிக்கெட் தொடரில் டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என கைப்பற்றி அசத்தியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் மட்டுமே பேட்டிங் செய்த நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் அம்பயர்கள் போட்டியை கைவிட்டனர்.

இரண்டு போட்டிகள் உள்ளன

இரண்டு போட்டிகள் உள்ளன

இதனால் ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி பேட்டிங்கில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.

19 ரன்கள் தேவை

19 ரன்கள் தேவை

இன்னும் 19 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1931 ரன்கள் குவித்து அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை புரிவார்.

26 வருட சாதனை

26 வருட சாதனை

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1993இல் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்தத் 64 இன்னிங்க்ஸ்களில் 1930 ரன்களை தொட்டு இருந்தார். சுமார் 26 ஆண்டுகள் கழித்து கோலி அதை முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது, அதிலும் கோலி இந்த மைல்கல்லை 34 இன்னிங்க்ஸ்களில் எட்டப் போகிறார்.

88 ரன்கள்

88 ரன்கள்

அதே போல 88 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் குவித்தவர் என்ற புதிய மைல்கல் சாதனை படைப்பார் கோலி. ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களை எட்டுவார். வெ.இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தன் 300வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 11, 2019, 14:52 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+