Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ரொம்ப மோசம்.. ஒண்ணு மேட்ச் முழுசா நடக்கணும்.. இல்ல நடக்காம போகணும்.. வெறுத்துப் போன கோலி!

Recommended Video

IND vs WI : மழையால் கைவிடப்பட்ட போட்டி..வெறுத்துப் போன கோலி!- வீடியோ

பிராவிடன்ஸ் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டி குறித்து பேசிய கோலி கிரிக்கெட்டில் மோசமான விஷயம் இது தான் எனக் கூறி இருக்கிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

முன்னதாக நடந்த டி20 தொடரை இந்தியா 3 - 0 என மொத்தமாக கைப்பற்றியது, அதே போல, ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என கருதப்பட்டது.

மழையால் தாமதம்

மழையால் தாமதம்

முதல் ஒருநாள் போட்டி நடந்த பிராவிடன்ஸ் மைதானத்தில் போட்டிக்கு முன்பு மழை பெய்ததால் டாஸ் போட நீண்ட நேரம் ஆனது. போட்டி சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

போட்டி துவக்கம்

போட்டி துவக்கம்

தாமதம் காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு துவங்கியது. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. அந்த அணி பொறுமையாக பேட்டிங் ஆடி வந்தது. வெஸ்ட் இண்டீஸ்.

மீண்டும் மழை

மீண்டும் மழை

5.4 ஓவர்கள் இருக்கும் போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். சில நிமிடங்கள் மழை பெய்தது. பின் மீண்டும் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி துவங்கியது.

அவுட் பீல்டு சேதம்

அவுட் பீல்டு சேதம்

அதன் பின் 13 ஓவர்கள் முடிந்த போது மீண்டும் மழை பெய்தது. அதன் பின் மழை நிற்பதும், வருவதுமாக இருக்க போட்டி நீண்ட நேரம் தடைபட்டது. ஒரு கட்டத்தில் மழை முற்றிலுமாக நின்றது. எனினும், மைதானத்தின் அவுட் பீல்டு சேதம் அடைந்தது.

போட்டி ரத்து

போட்டி ரத்து

இதையடுத்து போட்டி 20 ஓவர்களாக குறைத்தும் நடத்த முடியாது என்ற நிலையில் கைவிடப்பட்டது. 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்து இருந்தது. போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டும் நடக்காததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கோலி கருத்து

கோலி கருத்து

போட்டி முடிந்த உடன் இது குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, இது தான் கிரிக்கெட்டில் மோசமான விஷயம். நிறுத்தி நிறுத்தி ஆடுவது நல்ல உணர்வை கொடுக்காது. ஒன்று மழை பெய்து போட்டியே நடக்கக் கூடாது அல்லது முழு போட்டியும் நடக்க வேண்டும் என்று வெறுத்துப் போனது போல் கூறினார்.

காயம் ஏற்படும்

காயம் ஏற்படும்

மேலும், நிறைய தடைகள் ஏற்படும் போது வீரர்கள் காயம் அடையாமல் இருக்கிறார்களா என நாம் கவனமாக இருக்க வேண்டி உள்ளது என்றார். குறிப்பாக அவுட் பீல்டில் நீர் தேங்கி இருந்தால் வீரர்கள் கீழே விழுந்து காயமடைய அதிக வாய்ப்புள்ளது. உலகக்கோப்பையிலும் இதே சிக்கல் தான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 9, 2019, 10:49 [IST]
Other articles published on Aug 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+