Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற வழியே இல்லை.. உலகக்கோப்பை ஹீரோ ஜடேஜாவுக்கு அதே “பழைய அல்வா” தான்.. காரணம் அந்த 2 வீரர்கள்!

Recommended Video

India vs West indies : ஜடேஜாவுக்கு போட்டியாக இருக்கும் இருவர்..அணியில் வாய்ப்பு கிடைக்குமா?- வீடியோ

ப்ளோரிடா : உலகக்கோப்பை தொடரில் கலக்கிய ரவீந்திர ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்குவாரா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 3 முதல் துவங்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான உத்தேச இந்திய அணியில் ஜடேஜாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

உத்தேச அணியில் இருந்தாலும், அவர் போட்டியில் களமிறங்கி ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதற்கு காரணம், அந்த இரண்டு வீரர்கள்.

டி20 அணியில் ஜடேஜா

டி20 அணியில் ஜடேஜா

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான மூன்று வடிவ இந்திய அணிகளிலும் இடம் பெற்றார். டி20 அணியிலும் இடம் பெற்றார்.

இடம் கிடைக்குமா?

இடம் கிடைக்குமா?

அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்தாலும் போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. லீக் சுற்றின் கடைசியில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அரையிறுதியில் கலக்கினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அதே போன்ற நிலைமை தான் அவருக்கு ஏற்படுமோ என சந்தேகம் கொள்ளும்படி தான் இப்போது நிலைமை இருக்கிறது.

நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள்

நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் க்ருனால் பண்டியா, ராகுல் சாஹர், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா.

இவரால் சிக்கல் இல்லை

இவரால் சிக்கல் இல்லை

இவர்களில் மாற்று வீரராக கருதப்படும் வாஷிங்க்டன் சுந்தருக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்ற நிலையே உள்ளது. அவரது உள்ளூர் போட்டிகள் செயல்பாடுகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. சுந்தர் தவிர இருக்கும் மற்ற இருவர் தான் ஜடேஜாவின் வாய்ப்புக்கு குறுக்கே நிற்கிறார்கள்.

க்ருனால் பண்டியா உறுதி

க்ருனால் பண்டியா உறுதி

க்ருனால் பண்டியா கடந்த சர்வதேச டி20 தொடர்களில் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். அவர் அதிரடி பேட்டிங்கும் செய்வார் என்பதால், அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையே உள்ளது. இந்திய அணி வெறும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே போதும் என கருதினால் க்ருனால் பண்டியா தான் அணியில் இடம் பிடிப்பார் என எளிதாக கூறலாம்.

ராகுல் சாஹர்

ராகுல் சாஹர்

இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகாத வீரர் ராகுல் சாஹர். இவர் ஜடேஜாவுக்கு குறுக்கே நிற்கிறாரா? என்று நம்ப முடியாமல் நாம் கேட்கலாம். ஆனால், ஐபிஎல் தொடரில் ராகுல் சாஹர் பல சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களை தன் சுழல் மூலம் திக்குமுக்காட வைத்தார்.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு ஆடிய சாஹர், இலங்கை ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தினார். தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார் என்பதால், அவரை 2020 டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து அணியில் ஆட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஜடேஜாவுக்கு இடம் உண்டா?

ஜடேஜாவுக்கு இடம் உண்டா?

க்ருனால் பண்டியா, ராகுல் சாஹர் இருவரையும் 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து தான் அணியில் தேர்வு செய்துள்ளனர். ஆனால், ஜடேஜாவை அப்படித் தான் தேர்வு செய்தார்களா? அவரை டி20 வீரராக அணியில் கருதுகிறார்களா? என்ற கேள்விகளுக்கு சந்தேகம் மட்டுமே பதிலாக கிடைக்கும்.

அதே பழைய அல்வா

அதே பழைய அல்வா

உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ், சாஹலை முன்வைத்து, அவர்களுக்கு பில்டப் கொடுத்து தொடரின் முக்கால்வாசி போட்டிகளில் ஜடேஜாவுக்கு அல்வா கொடுக்கப்பட்டது. அணி நிர்வாகம் அதே பழைய அல்வாவை வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கொடுக்கலாம். டி20 மட்டுமல்ல, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜாவுக்கு அல்வா கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

Story first published: Thursday, August 1, 2019, 11:08 [IST]
Other articles published on Aug 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+