Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப் பாவமே.. எல்லாமே அதே மாதிரி நடக்குது.. அடுத்த அம்பதி ராயுடு இவரு தான்!

டெல்லி : இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விமர்சகர்கள் பலரும் இது குறித்து பேசி வருகின்றனர்.

இந்திய அணியில் நீண்ட காலமாக நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேன் அமையவில்லை. அந்த இடத்திற்குத் தான் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

நீண்ட காத்திருப்பு

நீண்ட காத்திருப்பு

இந்திய அணியில் முன்பு இடம் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் சுமார் 18 மாதங்கள் கழித்து மீண்டும் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். அவரை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள்? இடையில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து தள்ளிய போதும் அவருக்கு ஏன் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.

டி20 தொடரில் இல்லை

டி20 தொடரில் இல்லை

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். டி20 தொடரில் மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி, இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இரண்டு போட்டிகள் மட்டுமே

இரண்டு போட்டிகள் மட்டுமே

இதனால், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

அணியில் நீடிப்பாரா?

அணியில் நீடிப்பாரா?

இந்த இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால், அடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அணியில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதற்கு முன்பு எடுத்த முடிவுகள் அப்படி. அந்த பழைய நினைவுகள் இப்போது நம் கண் முன் வந்து போகிறது.

அம்பதி ராயுடு நிலைமை

அம்பதி ராயுடு நிலைமை

முன்பு இதே நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய நீண்ட காலம் கழித்து அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வந்தார். எனினும், இடையே மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ரன் குவிக்கவில்லை என்பதால் அத்தோடு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதே போல

குத்திக் காட்டிய கம்பீர்

குத்திக் காட்டிய கம்பீர்

அதே போல ஒரீரு போட்டிகளில் சரியாக ஆடாமல் போனால், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அதே நிலை தான் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் வீரர் கம்பீரும் இதை சுட்டிக் காட்டி இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக கூறி உள்ளார்.

Story first published: Sunday, August 11, 2019, 12:53 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+