Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Wi 2nd odi - இந்திய அணி திணறல்.. 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபம்.. காப்பாற்றிய மழை

பார்பிடாஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டியை வெற்றி பெற்றால் தொடரை இந்திய அணி கைப்பற்றி விடும்.

இந்த நிலையில் முக்கியமான இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனை அடுத்து தற்காலிக கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.

Ind vs wi 2nd odi - Rain stops play as indian batsman struggling

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் கில் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். கடந்த சில ஆட்டங்களாக தடுமாறிய சுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் 49 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 55 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து அக்சர் பட்டேல் இந்திய அணியில் நம்பர் நான்காவது வீரராக களம் இறக்கியது. ஆனால் அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை கிளப்பினார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் 24.1 ஓவர் முடிவில் இந்திய அணி 113 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த தருணத்தில் மழை திடீரென்று குறிக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மேலும் மலை மேகங்கள் சூழ்ந்து இருப்பதால் இன்றைய ஆட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் தான் என்று இருக்கிறார்கள். இதனால் மழை வந்து இந்தியாவை காப்பாற்றியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

Story first published: Saturday, July 29, 2023, 21:51 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+