Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: சொல்லி அடித்த கில்.. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

டெல்லி: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதுவே இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5-ஆம் நாள் வரை போட்டியை எடுத்துச் சென்றது.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் (175), சாய் சுதர்சன் (87), சுப்மன் கில் (129) ஆகியோர் அபாரமாகச் சதம் மற்றும் அரைசதம் அடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 270 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், 200 ரன்களுக்கு மேல் முன்னிலை இருந்தால் ஃபாலோ-ஆன் கொடுக்கலாம் என்ற விதியின் படி, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தது.

IND vs WI 2nd Test result India won by 7 wickets and first series win under Shubman Gill

ஆனால், இந்த முடிவு எதிர்பார்த்ததைப் போலச் செல்லவில்லை. ஃபாலோ-ஆனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 390 ரன்கள் சேர்த்தது. துவக்க வீரர் ஜான் கேம்ப்பெல் (115) மற்றும் ஷாய் ஹோப் (103) ஆகியோர் வரலாற்றுச் சதங்களைப் பதிவு செய்தனர். ஜஸ்டின் கிரீஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 50 ரன்கள் சேர்த்தார்.

நிம்மதிப் பெருமூச்சு விட்ட இந்தியா

வெஸ்ட் இண்டீஸின் அபாரமான பதிலடியால், இந்திய அணிக்கு 121 ரன்கள் என்ற வெற்றிக்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி மீண்டும் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், சில தடுமாற்றங்களுடன் ரன் சேர்த்த இந்திய அணி, ஐந்தாம் நாள் அன்று காலையில் அந்த இலக்கை எட்டியது. கே.எல். ராகுல் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியதன் மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

Story first published: Tuesday, October 14, 2025, 10:42 [IST]
Other articles published on Oct 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+