Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள்.. மின்னல் சதம்.. இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த ஷாய் ஹோப்

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கடைசி பந்தில் சிக்சர் விளாசி சதம் அடித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி வாணவேடிக்கை காட்டினர். ஒவ்வொரு பேட்டரும் சிக்ஸ், ஃபோர் என இந்திய பந்துவீச்சை அடித்து துவைத்தனர்.

IND vs WI 4th T20 Shai Hope Century Powers West Indies To 247 Against India At Hyderabad

தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஜுவல் ஆண்ட்ரூ 16 பந்துகளில் 21, ஹெட்மையர் 12 பந்துகளில் 33, ரோவ்மன் பாவெல் 17 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி ஓவருக்கு 12 ரன்கள் என்ற ரன் ரேட்டில் இருந்து கீழே இறங்கவே இல்லை. ஷாய் ஹோப் கடைசி ஓவரில் சதத்தை நெருங்கினார்.

ஆட்டத்தின் 20-வது ஓவரை நிதீஷ் குமார் ரெட்டி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்வதற்கு முன் ஷாய் ஹோப் 96 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதிப் பந்தை அவர் தூக்கி அடித்தபோது, பவுண்டரி எல்லையில் நின்ற திலக் வர்மா மைதான விளக்கு வெளிச்சத்தில் பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் கேட்சச்சை நழுவவிட்டார். பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்சராக மாறியது.

இதன் மூலம் கடைசி பந்தில் தனது சதத்தைப் பூர்த்தி செய்த ஷாய் ஹோப், 50 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்தார். இந்த இந்திய சுற்றுப்பயணத்தில் அவர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.

அவருக்கு பக்கபலமாக அதிரடி காட்டிய ஷெர்பேன் ரூதர்போர்ட் 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 91 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் மெகா டீல்.. DC அணியை விட்டு சன்ரைசர்ஸ் அணிக்கே திரும்பிய நடராஜன்.. ஆனால் சம்பளம் 'கட்’

ஐபிஎல் மெகா டீல்.. DC அணியை விட்டு சன்ரைசர்ஸ் அணிக்கே திரும்பிய நடராஜன்.. ஆனால் சம்பளம் 'கட்’

இந்திய பந்துவீச்சாளர்கள் 13 வைடுகள் உட்பட மொத்தம் 18 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினர். மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 52 ரன்களைக் கொடுத்தனர். பிரின்ஸ் யாதவ் ஓரளவு நன்றாக வீசி 4 ஓவர்களில் 36 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அக்சர் 45 ரன்கள் கொடுத்தார். 20 ஓவர்கள முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 247 ரன்கள் குவித்தது.

Story first published: Wednesday, October 14, 2026, 21:03 [IST]
Other articles published on Oct 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+