Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: ஆர்ஸ்தீப் சிங் பந்துவீச்சு தான் தோல்விக்கு காரணமா? முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

ஹைதராபாத்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், அவரை அதிகமாக விமர்சிக்க முன்னாள் இந்திய பேட்டர் அபிநவ் முகுந்த் மறுத்துள்ளார். இந்தத் தொடரில் பெரும்பாலான இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வழங்கி உள்ளதால், ஒரு தனிநபரை மட்டும் சுட்டிக்காட்டுவது நியாயமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 247 ரன்கள் குவிக்க, பதிலுக்குப் போராடிய இந்தியா 223 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

Arshdeep Singh

இதுகுறித்து பேசிய அபிநவ் முகுந்த், "அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை விட்டுக்கொடுக்கும் போது, ஒருவரை மட்டும் குறை சொல்வது சரியல்ல. இந்தத் தொடரில் பந்துவீச்சு அமைப்பே அதிக ரன்களைக் கொடுத்துள்ளது. எனவே நாம் மீண்டும் திட்டமிட வேண்டியுள்ளது. இந்தூர் போட்டியில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஷாய் ஹோப் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அர்ஷ்தீப் ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தார். அது அவர் தனது திட்டங்களின்படி சிறப்பாகப் பந்துவீசிய இன்னிங்ஸ்" என்று சுட்டிக்காட்டினார்.

IND vs WI: 4வது டி20 தோல்விக்கு காரணம் அபிஷேக் சர்மாவா? ஹனுமா விகாரி காட்டம்

IND vs WI: 4வது டி20 தோல்விக்கு காரணம் அபிஷேக் சர்மாவா? ஹனுமா விகாரி காட்டம்

"பும்ரா அணியில் இருக்கும்போதும் பொதுவாக முதல் ஓவரை அர்ஷ்தீப் தான் வீசுவார். ஆனால், இந்தத் தொடரில் அந்த வாய்ப்பை மயங்க் யாதவிற்கு விட்டுக்கொடுத்துள்ளார். பவர்ப்ளேயின் 6-வது ஓவரை வீச அவர் அழைக்கப்படுகிறார். அது அவர் வழக்கமாகச் செய்யும் ஒன்று அல்ல. அதேபோல, டெத் ஓவர்களில் பந்துவீசுவதை விரும்பும் அவர், அதற்கு முன்பாகவே பந்துவீச அழைக்கப்படுகிறார். இதனால் அவரது பங்களிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று முகுந்த் கூறினார்.

நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில், அர்ஷ்தீப் 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 35 ஆகவும், எகனாமி ரேட் 10.94 ஆகவும் உள்ளது. மறுபுறம், ஹைதராபாத் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் 4 ஓவர்களில் 41 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைப் பாராட்டிய முகுந்த், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு எதிராக அவர் வகுத்த வியூகங்கள் மிகவும் துல்லியமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

IND vs NZ: குல்தீப் யாதவை நீக்கியது தவறு.. முட்டாள் தனமான முடிவு.. அஸ்வின் கடும் விமர்சனம்

Also Read

IND vs NZ: குல்தீப் யாதவை நீக்கியது தவறு.. முட்டாள் தனமான முடிவு.. அஸ்வின் கடும் விமர்சனம்

"கீமோ பால் தொடக்கம் முதலே சிறப்பாகப் பந்துவீசினார். சஞ்சு சாம்சனுக்கு டீப் ஸ்கொயர் லெக் திசையிலும், இஷான் கிஷனுக்கு டீப் மிட்-விகெட் திசையிலும் ஃபீல்டர்களை நிறுத்தி, லெக் ஸ்டம்ப் யோர்க்கர்களை வீசியது சிறந்த திட்டமிடல். மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசி, களத்தில் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். இறுதியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அவரே அமைந்தார்" என்று முகுந்த் புகழாரம் சூட்டினார்.

Story first published: Thursday, October 15, 2026, 17:25 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+