Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI : அதிரடி மன்னனும் வேணாம்.. சிஎஸ்கே வீரரும் வேணாம்.. அதிர வைத்த வெ.இண்டீஸ்!

Recommended Video

அதிரடி வீரரை கழட்டி விட்ட வெ.இண்டீஸ் ... இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ஜமைக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடருக்கான அணியை அறிவித்தது.

ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சிஎஸ்கே நட்சத்திர ஆல் - ரவுண்டரான டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் இடம் பெறவில்லை.

ரஸ்ஸல் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உள்ளூர் டி20 தொடர்களில் ஆடி வரும் நிலையில், அவரை தேசிய அணியில் தேர்வு செய்யவில்லை.

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்

தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடர்கள் இந்தியாவில் வரும் டிசம்பர் 6 முதல் துவங்க உள்ளது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை தொடரை மையமாக வைத்து இந்த தொடருக்கு இந்தியா அணியை தேர்வு செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதே நோக்கில் இளம் வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.

பிராவோ அறிவிப்பு

பிராவோ அறிவிப்பு

இந்த அணித் தேர்வுக்கு முன்னதாக ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட டிவைன் பிராவோ தான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்காக ஆட உள்ளதாக கூறி வியப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஆண்ட்ரே ரஸ்ஸல்

மறுபுறம், கடந்த ஐபிஎல் தொடருக்குப் பின் தேசிய அணிக்கு நீண்ட நாட்கள் கழித்து திரும்பிய ஆண்ட்ரே ரஸ்ஸல், இந்த டி20 தொடரில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இருவரும் இல்லை

இருவரும் இல்லை

எனினும், இவர்கள் இருவரும் டி20 அணியிலும் இடம் பெறவில்லை. ஒருநாள் அணியிலும் இடம் பெறவில்லை. அதே சமயம், இளம் வீரர்களான பிரான்டன் கிங் மற்றும் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் என்ற இரு புதுமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேண்டாம்

வேண்டாம்

தேசிய அணியைக் காட்டிலும், உலகம் முழுதும் நடைபெறும் தொழில்முறை டி20 தொடர்களுக்கு முக்கியத்துவம் தரும் ரஸ்ஸல், பிராவோ போன்ற வீரர்கள் இனி வேண்டாம் என்ற முடிவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வந்துள்ளதாகவே தோன்றுகிறது.

பாபியன் ஆலன்

பாபியன் ஆலன்

சில வாரங்களாக காயத்தில் இருந்த பாபியன் ஆலன், இந்திய அணிக்கு எதிரான டி20 அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். டி20 அணிக்கும், ஒருநாள் அணிக்குமான வீரர்களில் அதிக மாறுபாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெயில் விலகல்

கிறிஸ் கெயில் விலகல்

மேலும், மூத்த வீரர் கிறிஸ் கெயில் தான் சிறிது காலம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்து இருப்பதால், அவர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

வெ.இண்டீஸ் ஒருநாள் அணி

வெ.இண்டீஸ் ஒருநாள் அணி

வெ.இண்டீஸ் ஒருநாள் அணி விவரம் - பாபியன் ஆலன், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், பிரான்டன் கிங், ஈவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே, கீரான் பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தின், செர்ஃபேன் ரூதர்போர்டு, சிம்மன்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்

வெ.இண்டீஸ் டி20 அணி

வெ.இண்டீஸ் டி20 அணி

வெ.இண்டீஸ் டி20 அணி விவரம் - சுனில் ஆம்ரிஸ், ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், பிரான்டன் கிங், ஈவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே, கீரான் பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ செப்பெர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்

Story first published: Friday, November 29, 2019, 11:19 [IST]
Other articles published on Nov 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+