ரோஹித் சர்மாவுக்கு அவுட்டா? கள அம்பயருக்கு ஷாக் கொடுத்த 3வது அம்பயர்.. என்னங்க நடக்குது?
Recommended Video
ரோஹித் சர்மாவுக்கு அவுட்டா? கள அம்பயருக்கு ஷாக் கொடுத்த 3வது அம்பயர்.. என்னங்க நடக்குது?
மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு தவறாக கொடுக்கப்பட்ட அவுட் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
மூன்றாவது அம்பயரின் முடிவை கண்டு களத்தில் இருந்த அம்பயரே ஒரு வினாடி அதிர்ச்சி அடைந்தார். இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அந்த கேட்ச்
கீமர் ரோச் வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சந்தித்தார் ரோஹித் சர்மா. அவர் பந்தை தவறவிட்டார். பந்து பேட்டுக்கும், காலுக்கும் இடையே சென்றது. அப்போது ஒரு சத்தம் எழுந்தது. அதனால், பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக எண்ணினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.

அவுட் தர மறுப்பு
கள அம்பயர் அவுட் தர மறுத்தார். உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரிவ்யூ கேட்டனர். ரோஹித் சர்மா பந்து பேட்டில் படவில்லை என்பதால் இது அவுட் இல்லை என தீர்மானமாக நின்று இருந்தார்.

3வது அம்பயர் முடிவு
மூன்றாவது அம்பயர் மைக்கேல் கோஃப் மிக விரைவாக ரிவ்யூ பார்த்தார். பந்து பேட்டுக்கும், காலுக்கும் இடையே செல்லும் வீடியோவை பார்த்த அவர், அடுத்து ஸ்னிக்கோ மீட்டரை பார்த்தார். அதில் பந்து பேட்டை கடக்கும் போது, அதிர்வு இருப்பது தெரிந்தது. உடனடியாக இது அவுட் என தீர்வு கொடுத்தார், பந்து காலில் பட்டிருக்கலாம் என்ற கோணத்தை அவர் சிந்திக்கவே இல்லை.

ஏன் அவசரம்?
மூன்றாவது அம்பயர் ஏன் நிதானமின்றி அவசர அவசரமாக தீர்ப்பு கொடுத்தார் என்பதே பலருக்கும் புரியவில்லை. கள அம்பயர் அவுட் இல்லை என தீர்ப்பு கொடுத்த நிலையில், அதை மாற்ற வேண்டும் என்றால் தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே மூன்றாவது அம்பயர் அதை மாற்ற முடியும் என்பது விதி. ஆனால், இங்கே ஆதாரம் இன்றி ரோஹித் சர்மாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.
அம்பயர் ஷாக்
ரசிகர்கள் மட்டுமின்றி, கள அம்பயரும் மூன்றாவது அம்பயரின் முடிவை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது ஏமாற்றம் மற்றும் முக பாவனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் அதை குறிப்பிட்டு, மூன்றாவது அம்பயரை திட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications