For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இப்படி ஆடுறீங்க? தோனி பெயரை சொல்லாமல் விமர்சித்த சேவாக்.. எச்சரித்த ரசிகர்கள்!

Recommended Video

WORLD CUP 2019: IND VS WI | தோனி பெயரை சொல்லாமல் விமர்சித்த சேவாக்- வீடியோ

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சராசரியாகவே இருந்தது.

குறிப்பாக மிடில் ஓவர்களில் இந்திய அணியின் பேட்டிங் மிக மந்தமாக இருந்தது. வழக்கம் போல தோனி தான் இந்த முறையும் ரன் குவிக்காமல், பந்துகளை வீணடித்தார். இதைத் தான் சேவாக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

தோனி தடுமாற்றம்

தோனி தடுமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் இந்தியா 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கினார் தோனி. 40 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டி போல பேட்டிங் செய்தார். கடைசி ஓவர்களில் தோனி வேகம் எடுத்தாலும், மத்திய ஓவர்களில் ஏற்பட்ட பாதிப்பை அது ஈடுகட்டவில்லை. இந்தப் போட்டியில் தோனி அரைசதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே தடுமாற்றம்?

எங்கே தடுமாற்றம்?

தோனி சுழற் பந்துவீச்சில் தடுமாறுவதாக புகார் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் போட்டியிலும் தோனி மிக மோசமாக சுழற் பந்துவீச்சில் தடுமாறினார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் நிதானம் காட்டினார்.

சேவாக் விமர்சனம்

சேவாக் விமர்சனம்

இது குறித்து சேவாக் கடும் விமர்சனத்தை முன் வைத்தார். அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் போட்டியில் (சுழற் பந்துவீச்சாளர்) ரஷித் கானின் முதல் 4 ஓவர்களில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால், அடுத்த 6 ஓவர்களில் அவர் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் (சுழற் பந்துவீச்சாளர்) பாபியன் ஆலனின் முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 5 ஓவர்களில் வெறும் 18 ரன்களே கொடுத்தார். சுழற் பந்துவீச்சாளர்களிடம் இவ்வளவு தடுப்பாட்டம் தேவையில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.

சச்சின் என்ன சொன்னார்?

சச்சின் என்ன சொன்னார்?

முன்பு ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின் சச்சினும் இதே கருத்தை தான் கூறி இருந்தார். அவர் தோனி - கேதார் ஜாதவ் மத்திய ஓவர்களில் மிகவும் பொறுமையாக ஆடினார்கள். அது தேவையற்றது என கூறி இருந்தார்.

ரசிகர்கள் எச்சரிக்கை

ரசிகர்கள் எச்சரிக்கை

தோனி வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் தடுமாறி அடித்த அரைசதத்தை காட்டி, சச்சினுக்கு பதிலடி கொடுத்து பதிவுகள் போட்டு வந்தனர் தோனி ரசிகர்கள். அதைக் காட்டி சேவாக் இப்போது தோனியை விமர்சித்து இருப்பதால், நாளை அவரையும் தோனி ரசிகர்கள் குறி வைத்து சமூக வலைதளங்களில் தாக்குவார்கள் என சிலர் எச்சரிக்கை விடுத்தனர்.

Story first published: Friday, June 28, 2019, 11:09 [IST]
Other articles published on Jun 28, 2019
English summary
IND vs WI Cricket World cup 2019 : Sehwag slams Dhoni’s slow batting after Sachin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+