Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி பேட்டிங் விவகாரம்.. மாங்கு மாங்குன்னு விமர்சித்த விவிஎஸ் லக்ஷ்மனுக்கு கங்குலி நெத்தியடி!

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பொறுமையாக ஆடிய விதம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சிலர் தோனி பொறுமையாக ஆடி, பின்னர் கடைசி நேரத்தில் வேகம் எடுத்தது சரி தான் என கூறுகின்றனர். சிலர் தோனியின் பேட்டிங்கில் தவறு உள்ளது என கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் இருவரும் எதிர் எதிர் திசையில் விவாதம் செய்தனர். லக்ஷ்மன் ஆழமாக இறங்கி விமர்சனம் செய்தார். கங்குலி அதை ஒப்புக் கொள்ளவில்லை. நெத்தியடியாக பதில் கூறி திகைக்க வைத்தார்.

தோனி ஆட்டம்

தோனி ஆட்டம்

தோனி வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் மிகவும் பொறுமையாக ஆடி வந்தார். கடைசி ஓவரில் அவர் 16 ரன்கள் குவித்தது மட்டுமே அவர் ஆடியதில் அதிரடி ஆட்டம். அதுவரை அவர் ஸ்ட்ரைக் ரேட் 35 முதல் 70 வரை தான் இருந்தது. 61 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார் என்றாலும், முதல் 40 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் தோனி.

முந்தைய போட்டியில்..

முந்தைய போட்டியில்..

ஆப்கானிஸ்தான் போட்டியிலும் இதே போல மிகப் பொறுமையாக ஆடினார். அந்தப் போட்டியிலும் பொறுமையாக ஆடி விட்டு கடைசி நேரத்தில் அவர் வேகம் எடுக்க முயன்ற போது ஆட்டமிழந்தார். ஆப்கன் போட்டியில் அவர் 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

சச்சின் என்ன சொன்னார்?

சச்சின் என்ன சொன்னார்?

சச்சின் ஆப்கன் போட்டிக்கு பின் பேசுகையில் தோனி மிகவும் பொறுமையாக ஆடியதாகவும், ஆப்கன் அணியின் சுழற் பந்துவீச்சில் தேவையே இல்லாமல் அதிக டாட் பால் ஆடியதாக விமர்சனம் செய்தார்.

லக்ஷ்மன் விமர்சனம்

லக்ஷ்மன் விமர்சனம்

அதே போல வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அரைசதம் அடித்தாலும், விவிஎஸ் லக்ஷ்மன் தோனியை விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில், தோனிக்கு நிச்சயம் மத்திய ஓவர்களில் பேட்டிங் செய்வதில் பிரச்சனை உள்ளது. அவர் வேகப் பந்துவீச்சில் நன்றாக ஆடுகிறார். ஆனால் சுழற் பந்துவீச்சில் சரியாக ஆடுவதில்லை.

நோக்கம் சரியில்லை

நோக்கம் சரியில்லை

தோனி சரியான நோக்கத்தில் தான் விளையாடுகிறாரா என இப்போது தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் அப்படி ஆடவில்லை. விரைவாக ரன் எடுக்கக் கூடிய, அனுபவ வீரரான தோனியிடம் நாம் நிறைய எதிர்பார்க்கிறோம் என்று கூறினார் லக்ஷ்மன்.

கங்குலி எதிர் வாதம்

கங்குலி எதிர் வாதம்

ஆனால், கங்குலி இதை ஒப்புக் கொள்ளவில்லை. தோனி இப்போது எப்படி ஆடுகிறாரோ அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரே வரியில் லக்ஷ்மனுக்கு பதிலடி கொடுத்தார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின் சச்சின் தோனியை விமர்சித்த போதும், கங்குலி, தோனியை ஆதரித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 28, 2019, 16:49 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+