Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: 100 ஓவர்.. இந்திய பவுலர்களை திணற வைத்த பிளான்.. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சேஸ் ஓபன் டாக்

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் போராட்ட குணம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக, ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் காட்டிய போராட்ட குணம், அந்த அணிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ், தோல்வியின் சோகத்தைக் கடந்து, தனது அணியின் நேர்மறையான அம்சங்களை முன்னிலைப்படுத்தி பேசினார்.

டெல்லி டெஸ்ட்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்குச் சுருண்டது. ஃபாலோ-ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல் (115) மற்றும் ஷாய் ஹோப் (103) ஆகியோரின் அபார சதங்களால் 390 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 121 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இந்த எளிய இலக்கை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடியது.

IND vs WI Despite series loss West Indies Captain Roston Chase points out positives of their team

இந்த நிலையில், தோல்வி குறித்துப் பேசிய ரோஸ்டன் சேஸ், தனது அணியின் செயல்பாட்டில் கிடைத்த நல்ல அம்சங்களைப் பட்டியலிட்டார். "இந்தப் போட்டியில் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நேர்மறையான விஷயம், ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் அற்புதமான சதங்கள்தான். அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள்."

"நீண்ட காலத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்துள்ளோம். அது மற்றொரு நேர்மறையான அம்சம். போட்டியை ஐந்தாவது நாள் வரை எடுத்துச் சென்றது, எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம்." என்றார் ரோஸ்டன் சேஸ்.

வெற்றி பெற்ற வியூகம்

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், தங்கள் அணியின் திட்டமிடலைப் பாராட்டினார். "80 ஓவர்களுக்கு மேல் எப்படி பேட்டிங் செய்வது என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்தோம். சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது, ஸ்வீப் ஷாட்களைப் பயன்படுத்துவது, கால்களைப் பயன்படுத்தி ஆடுவது எனப் பல யோசனைகளை நாங்கள் வகுத்தோம். நாங்கள் பேசிய திட்டங்களை, வீரர்கள் களத்தில் மிகச் சரியாகச் செயல்படுத்தினார்கள்" என்று ரோஸ்டன் சேஸ் வெளிப்படையாகக் கூறினார்.

"எதிர்காலத்திற்கான படிக்கல் இது!"

தனது அணியின் திறமை மீது நம்பிக்கை தெரிவித்த சேஸ், இந்தப் போராட்டத்தை ஒரு தொடக்கமாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டார். "இங்குள்ள வீரர்கள், கரீபியனின் தலைசிறந்த வீரர்களில் சிலர். எனவே, இந்த டெஸ்ட் போட்டியை, வரவிருக்கும் தொடர்களுக்கு ஒரு படிக்கல்லாகவும், ஒரு நம்பிக்கையூட்டும் நிகழ்வாகவும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

21 வருடமாக இந்தியாவுக்கு எதிராக தொடரும் சோகம்.. நொந்து போன வெஸ்ட் இண்டீஸ்.. ஒரு மேட்ச் கூட ஜெயிக்கலை

வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைச் சந்தித்திருந்தாலும், குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் காட்டிய போராட்ட குணம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் எதிர்காலம் குறித்த ஒரு சிறிய நம்பிக்கையை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விதைத்துள்ளது. கேப்டன் ரோஸ்டன் சேஸின் வார்த்தைகளும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

Story first published: Tuesday, October 14, 2025, 11:30 [IST]
Other articles published on Oct 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+