For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் தான் அடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்.. தவானுக்கு ஆப்பு வைக்கப் போகும் வீரர்!

Recommended Video

மீண்டும் சஞ்சு சாம்சன்... இந்திய அணியில் மாற்றம்!| Sanju Samson announced as replacement for dahawan

மும்பை : துவக்க வீரர் தவான் காயத்தால் நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக துவக்க வீரராக கேஎல் ராகுல் தான் களமிறங்குவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தவான் ஏற்கனவே பேட்டிங்கில் நிதானமாக ஆடுவதாக புகாரில் இருக்கும் நிலையில், கேஎல் ராகுல் தனக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பில் பெரிய அளவில் ரன் குவித்தால், அது தவானுக்கு பெரிய சிக்கலாக மாறும். தவான் மீண்டும் அணிக்கு திரும்ப முடியாத நிலை கூட ஏற்படலாம்.

உலகக்கோப்பை ஜோடி

உலகக்கோப்பை ஜோடி

2019 உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் அடைந்தார். அப்போது கேஎல் ராகுல், ரோஹித் சர்மாவுடன் இணைந்து துவக்கம் அளித்தார். அப்போது ஓரளவு சிறப்பாக ரன் குவித்து இருந்தார் ராகுல்.

தவான் தடுமாற்றம்

தவான் தடுமாற்றம்

பின்னர் தவான் காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் அணிக்கு திரும்பினார். எனினும், தவான் பேட்டிங்கில் எளிதாக ரன் குவிக்க முடியாமல் நிதானமாக ஆடி வந்தார். அது டி20 போட்டிகளில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

ராகுல் பேட்டிங் வரிசை

ராகுல் பேட்டிங் வரிசை

ரோஹித் சர்மா - தவான் துவக்க ஜோடியை தாண்டி துவக்க வீரரான ராகுலால் அணியில் துவக்க வீரராக களமிறங்க முடியாத நிலை இருந்தது. அவர் மிடில் ஆர்டரில் நிலையற்ற பேட்டிங் வரிசைகளில் தான் ஆடி வந்தார்.

ராகுல் பார்ம்

ராகுல் பார்ம்

பேட்டிங் வரிசை மாற்றத்தை சமாளித்து ஓரளவு ரன் குவித்து வரும் ராகுல், கடந்த வங்கதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது சிறப்பாக ரன் குவித்தார்.

தவான் காயம்

தவான் காயம்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் பெற்ற தவான் காயத்தால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அணியில் இடம் பெற்றார்.

ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு

ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு

சஞ்சு சாம்சன் மாற்று வீரராக இடம் பெற்றாலும், ராகுல் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ரோஹித் சர்மா- ராகுல் இணைந்து துவக்கம் அளித்து இருப்பதால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

அணியில் நிலையான இடத்தை பெற முடியாமல் தவித்து வரும் ராகுல், தவான் இல்லாத இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர்ந்து அதிக ரன்களை குவித்தால், அணியில் நிரந்தரமாக துவக்க வீரராக இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

சிக்கலில் தவான்

சிக்கலில் தவான்

தவான் மீது ஏற்கனவே பேட்டிங்கில் புகார் இருக்கும் நிலையில், ராகுல் சிறப்பாக ஆடிவிட்டால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினமாக மாறி விடும்.

Story first published: Saturday, November 30, 2019, 10:02 [IST]
Other articles published on Nov 30, 2019
English summary
IND vs WI : Dhawan may lose his spot to KL Rahul after West Indies series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+