Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அண்ணே! ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்!

மும்பை : இந்திய டி20 அணியில் தன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தன் இடத்தை கிட்டத்தட்ட உறுதியாக பிடித்துவிட்டார் ராகுல்.

அதே சமயம், ராகுலின் இந்த எழுச்சி மூத்த வீரர் தவானின் சரிவாக அமைந்துள்ளது.

தவான் சமீப காலமாக சரியாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதுடன் காயத்தில் இருக்கிறார். அவர் மீண்டும் டி20 அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரில் என்ன நடந்தது?

உலகக்கோப்பை தொடரில் என்ன நடந்தது?

2019 உலகக்கோப்பை தொடரில் தான் ராகுலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த தொடரில் சில போட்டிகளில் ஆடிய தவான் உச்சகட்ட பார்மில் இருந்தார். எனினும், அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டு அந்த தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.

ராகுல் அபார ஆட்டம்

ராகுல் அபார ஆட்டம்

அப்போது துவக்க வீரரான ராகுல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து வந்தார். அவருக்கு ஏற்ற துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. ரோஹித் சர்மாவுடன் இணைந்து சிறப்பான துவக்கம் அளித்து வந்தார் ராகுல்.

தவான் தடுமாற்றம்

தவான் தடுமாற்றம்

உலகக்கோப்பை தொடருக்கு பின் தவான் காயத்தில் இருந்து மீண்டு அணியில் துவக்க வீரராக இணைந்தார். டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், தவான் சராசரியாக ரன் எடுத்தாலும், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க முடியாமல் திணறினார்.

ராகுல் தவிப்பு

ராகுல் தவிப்பு

அதே சமயம், ராகுல் அணியில் இடம் கிடைக்காமல் சில போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடுவதும், பின் வெளியே மாற்று வீரராக அமர்வதுமாக தவித்து வந்தார். அந்த சமயத்தில் மீண்டும் வாய்ப்பு தேடி வந்தது.

தவான் காயம்

தவான் காயம்

வங்கதேச டி20 தொடரில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 30, 40 ரன்கள் எடுத்து விமர்சனத்துக்கு ஆளான தவான், தன் பார்மை மீட்க உள்ளூர் டி20 போட்டிகளில் ஆடினார். அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ராகுல் அதிரடி ஆட்டம்

ராகுல் அதிரடி ஆட்டம்

அதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ராகுல் வாய்ப்பு பெற்றார். இந்த தொடரில் மூன்று போட்டிகளில் ஆடிய அவர் 62, 11, 91 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 153 ஆகும்.

இடம் உறுதி

இடம் உறுதி

இந்த அதிரடி ரன் குவிப்பை அடுத்து ராகுலை இனி அணியை விட்டு நீக்குவது நடக்காத காரியம் என விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும், ராகுல் டி20 போட்டிகளில் மிக சிறப்பான சாதனைகள் செய்துள்ளார். தரவரிசையில் ரோஹித், கோலியை விட முன்னிலையில் இருக்கிறார்.

ஒருநாள் தொடரில் ராகுல்

ஒருநாள் தொடரில் ராகுல்

அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் தவான் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் துவக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. அந்த தொடரிலும் ராகுல் ரன் குவித்தால் அவர் அணியின் நிரந்தர துவக்க வீரராக மாறுவார்.

தவான் நிலை

தவான் நிலை

தவானுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் டி20 அணியில் அவர் மீண்டும் இடம்பெற வாய்ப்பே இல்லை என்பதே இப்போதைய நிலைமை.

Story first published: Thursday, December 12, 2019, 17:14 [IST]
Other articles published on Dec 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+