
கோலியால் பரபரப்பு
இந்த காட்சிகள் அனைத்தும் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேப்டன் கோலி களத்துக்கு வெளியே நான்காவது அம்பயரை நோக்கி சென்றது மேலும் பரபரப்பை அதிகரித்தது. ஒருவேளை அவர் களத்துக்குள் வந்து விடுவாரோ என்ற அச்சம் கூட சிலருக்கு எழுந்தது.

முதல் ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 287 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப் 102*, ஹெட்மயர் 139 ரன்கள் குவிக்க, அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக சேஸிங் செய்து வென்றது.

இந்தியா பேட்டிங்
இந்தியா பேட்டிங் ஆடி வந்த போது துவக்கத்தில் ராகுல் 6, கோலி 4, ரோஹித் சர்மா 36 ஆகியோரை இழந்து தவித்தது. கடைசி 10 ஓவர்களை ஜடேஜா - ஜாதவ் தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற நிலையில் ஆடி வந்தனர்.

ஜடேஜா ரன் ஓடினார்
48வது ஓவரில் ஜாதவ் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை சந்தித்த ஜடேஜா ஒரு ரன் ஓடினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஸ்டன் சேஸ் பந்தை நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்தார்.

அம்பயர் மறுப்பு
முதலில் அம்பயர் அவுட் பற்றி எதுவும் கூறவில்லை. பின்னர், அம்பயர் அருகே சென்ற சேஸ் இது அவுட்டா? எனக் கேட்டார். அம்பயர் இல்லை என மறுத்து விட்டார். பொதுவாக இது போன்ற நேரடி ரன் அவுட்களுக்கு மூன்றாவது அம்பயர் உதவியை அம்பயர்கள் நாடுவது வழக்கம்.

காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்
அப்போது, நேரலையில் அந்த ரன் வுட் குறித்த ரீப்ளே ஒளிபரப்பானது. அந்த காட்சி மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காட்டப்பட்டது. அதைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இது அவுட் தான் என முறையிட்டனர்.

உஷாரான பொல்லார்டு
கேப்டன் கீரான் பொல்லார்டு நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்து வேகமாக ஓடி வந்து அம்பயரிடம் இது அவுட் தான் என முறையிட்டு, முதலில் அம்பயர் மூன்றாவது அம்பயரை அணுகாமல் போனதற்கு தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மாறிய தீர்ப்பு
பின்னல், கள அம்பயர்கள் இருவரும் பேசிய பின், மூன்றாவது அம்பயரை நாடினர். பின்னர் ஜடேஜாவுக்கு அவுட் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. விதிப்படி அந்த அம்பயர் அவுட் இல்லை என முதலில் கூறிய நிலையில், மீண்டும் அம்பயர் மூன்றாவது அம்பயரை நாட முடியாது என கூறப்படுகிறது.
இறங்கி வந்த கோலி
இந்த நிகழ்வுகளை கண்ட கோலி கோபத்தில் பொங்கி எழுந்தார். நேராக அறையில் இருந்து கீழே இறங்கி பவுண்டரி எல்லை அருகே இருந்த நான்காவது அம்பயர் அருகே வந்த கோலி தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தோனி போல் கோலி செய்வாரா?
2019 ஐபிஎல் தொடரில் தோனி களத்துக்கு உள்ளே வந்து அம்பயருடன் வாக்குவதாம் செய்தது பெரும் சர்ச்சை ஆனது. கடும் கோபத்தில் இருந்த கோலி அதே போல, களத்துக்குள் சென்று விடுவாரோ என்ற பதற்றமும் இருந்தது. எனினும், அப்படி எதுவும் நடக்கவில்லை.


Click it and Unblock the Notifications











