Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20ல் தினேஷ் கார்த்திக் தந்த ட்விஸ்ட்.. 140க்கு தடுமாறிய இந்தியா 190க்கு சென்றது எப்படி??

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20ல் தினேஷ் கார்த்திக் கொடுத்த ட்விஸ்டால் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Recommended Video

IND vs WI Dinesh Karthik 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அசத்தல் *Cricket

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று ப்ரைன் லாரா மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரண் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா - சூர்யகுமார் யாதவ் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் (14), ஹர்திக் பாண்ட்யா (1), ரவீந்திர ஜடேஜா (16) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார். மறுமுணையில் தூண் போன்று நிலைத்து நின்றார். 44 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 64 ரன்களை குவித்தார். இதனால் 138 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 தினேஷ் கார்த்திக்கின் அதிரடி

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி

இந்திய அணி 150 ரன்களையாவது தாண்டுமா என்ற சூழல் இருந்த போது தினேஷ் கார்த்திக் கடைசி நேர ட்விஸ்ட் கொடுத்தார். 19 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்களை குவித்தது.

விரட்டிட முடியுமா?

விரட்டிட முடியுமா?

போட்டி நடைபெறும் ப்ரைன் லாரா மைதானத்தில் மழைப்பொழிவு காரணமாக பிட்ச்- ஈரப்பதமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் 2வது பேட்டிங் செய்யும் அணி 191 ரன்களை விரட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Story first published: Friday, July 29, 2022, 22:32 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+