Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”4 வருஷமா ஜெயிக்கலையா.. எவ்ளோ பெரிய வேலைய பார்த்து விட்டுருக்கீங்கடா” இந்தியாவை வெளுக்கும் மீம்ஸ்!

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IND vs WI: Fantastic Memes from Social Media, after West Indies beat India by 6 wickets

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இதனை பிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு, "என் உசுற வாங்குறதுக்குனே வந்திருக்கீங்க டா" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "4 வருஷமா ஜெயிக்காதவன போய் ஜெயிக்க வச்சிருக்க" என்று ரசிகர்கள் புலம்புவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IND vs WI: Fantastic Memes from Social Media, after West Indies beat India by 6 wickets

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தலைகீழாக மாற்றப்பட்டு, பேட்ஸ்மேன்கள் இஷ்டத்திற்கு களமிறங்கப்பட்டடனர். அதேபோல் நேற்றைய ஆட்டத்திலும் அக்சர் 4வது இடத்திலும், சூர்யகுமார் 6வது இடத்திலும் வந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பஞ்ச தந்திரம் படத்தில் நண்பர்களை எண்ணி தலையில் அடித்துக் கொள்ளும் கமல்ஹாசனை போல், இந்திய பேட்டிங் ஆர்டரை பார்த்து ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்வதாக உருவாக்கப்பட்ட மீம் நிதர்சன உண்மை.

IND vs WI: Fantastic Memes from Social Media, after West Indies beat India by 6 wickets

நேற்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டிய சூர்யகுமார் யாதவ் 6வது இடத்திலும், கீழ் வரிசையில் களமிறங்க வேண்டிய அக்சர் படேலை 4வது இடத்திலும் களமிறக்கி இந்திய அணி விவகாரமான சோதனை முயற்சிகளை மேற்கொண்டது. இதன் பலனாக இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனை சிவாஜி படத்தில் அடிவாங்கிய அரசியல்வாதிகள் வெளியே வரும் போது, "அண்ணே, பேச்சுவார்த்தைலாம் நல்லபடியா முடிஞ்சுதா என்ற கேள்விக்கு, சிறப்பா முடிஞ்சுது" என்று பதில் அளிப்பார்கள். அதுபோல், "தலைவரே.. அந்த பரிசோதனை முயற்சி.. எல்லாம் நல்ல படியாக போய்ட்டு இருக்கு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

IND vs WI: Fantastic Memes from Social Media, after West Indies beat India by 6 wickets

தில்லாலங்கடி படத்தில் ஷ்யாமை பார்த்து வடிவேலு, "நான் நேரடியா பேச விரும்பல.. சுத்தி வளச்சு பேசுறேன்.. " என்று ஒரு வசனம் சொல்லுவார். அதுபோல் விராட் கோலிக்கும் சேர்த்து ஓய்வு கொடுத்த ரோகித் சர்மாவை பார்த்து ரசிகர்கள் சொல்வது போல், "உனக்கு ரெஸ்ட் வேணும்னா நீ மட்டும் தான் ரெஸ்ட் எடுக்கலாம்.. அடுத்தவனை எடுக்க சொல்லக் கூடாது" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.

Story first published: Sunday, July 30, 2023, 9:30 [IST]
Other articles published on Jul 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+